எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.

இந்திய ரயில்வேவின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் 77,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷிவினி வைஷ்னாவ்-விடம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த புள்ளிவிவரங்களே இவை.

டிசம்பர் 23, 2022 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் (Non-Gazetted Posts) நிரப்பப்படாமல் உள்ளன. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 14,815 பணியிடங்களும், போக்குவரத்துத் துறையில் 62,264 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 87,654 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 64,346 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் துறையில் 38,096 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.

தென்கிழக்கு ரயில்வே, ஜூன் 2 மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜாரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. இம்மாநிலத்தில் பிப்ரவரி 3, 2023 நிலவரப்படி, 17,811 பணியிடங்களும் (Non-Gazetted Posts) 150 அதிகாரிகளுக்கான (Non-Gazetted officer) பணியிடங்களும் நிரப்பப்படாமல் மிகவும் சிரமத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் 39,226 பணியிடங்களும், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 30,785 பணியிடங்களும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 30,735 பணியிடங்களும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 28,876 பணியிடங்களும் மறுபுறம், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் 6,638 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய ரயில்வேத் துறையில் குரூப் ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3,15,780 காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றன.

2021-22 ஆம் ஆண்டில் குரூப் ஏ மற்றும் சி ஆகிய இரண்டு காலியிடங்களுக்கும் நாடு முழுவதும் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 2021-22ல் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. அதே நேரத்தில் 44,847 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும் காலியாக உள்ள குரூப் சி (Non-Gazetted Posts) பணியிடங்களின் எண்ணிக்கை 28,650. இதில், 14,203 பாதுகாப்புப் பிரிவு பணிகள் மற்றும் 14,447 இதர பணியிடங்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

2020–21 காலகட்டத்தில், 1,923 காலியிடங்களுக்கு 440,000 பேர் விண்ணப்பித்தனர். தொழில்நுட்பம் அல்லாத 35,281 காலியிடங்களுக்கு 1.26 கோடி பேர் விண்ணப்பித்தனர். எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.

கட்டுரையாளர்: கல்பனா

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *