வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும் என்ற பிராமணீய வல்லாதிக்க மனப்பான்மைதான் இந்தியா காலங்காலமாக முன்னேறாமல் இருந்ததற்குக் காரணம் என்று கடந்த அமர்வில் கண்ட அவையோர், இறுதியாக வள்ளுவர் சொல்லிச் சென்றது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளுவர் பேசலானார்.)

திருவள்ளுவர்: அன்பர்களே! கடந்த அமர்வின் இறுதியில், வரலாறு மிகவும் முக்கியம் என்றும் வரலாற்றைத் திரிக்க முயலும் காவிக் கொடியோர் கூட்டம் புறக்கணிக்கப்பட்டு அதன் கயமைச் செயல்களை மக்கள் அறிந்து கொள்ள வைக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். இந்தியாவைப் பீடித்திருக்கும் ஒரு பெருநோய் சதுர்வர்ண அமைப்பு ஆகும். இந்த அமைப்பை ரிக் வேத காலத்திலிருந்து உருவாக்கிப் பாதுகாத்து வந்து கொண்டிருக்கும் பிராமணர்கள், எந்த அளவுக்கு பிராமணரல்லாதவர்களை அவமதித்தும், ஏளனம் செய்தும், நிந்தனை செய்தும் வந்திருக்கிறார்கள் என்பது நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளதொரு வரலாறு ஆகும். இவ்வாறு அவமதிக்கப்பட்டுவந்த பிராமணரல்லாத மக்கள், காலப்போக்கில் “மானத்தோடு கூடிய கண்ணியம்” (Dignity) என்றால் என்ன  தெரிந்துகொள்ளாமலே, பிராமணீயச் சமூக அமைப்பில் பிராமணரின் அடிமைகளாகவே காலங்காலமாக வாழ்ந்து செத்துப்போய்க் கொண்டிருந்தனர். மகாவீரர், புத்தர் முதலாக, பெரியார், அம்பேத்கார் ஈறாக, பல சிந்தனையாளர்களை இவர்களைத் துயிலெழுப்பி, உயிருள்ள வாழ்க்கை வாழச் செய்திருந்தும் கூட மறுபடியும் மறுபடியும், ஆரியக்கூட்டத்திற்கு அடிமைகளாகி வீழ்ந்து கொண்டிருக்கின்றனர் பிராமணரல்லாத மக்கள். “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்” என்ற இலக்கணத்துடன் வாழ்ந்த அன்றைய தமிழர், பிற்காலத்தில் அதாவது ஆரியத்தின் நுழைவுக்குப் பிறகு பல்வேறு சாதிகளாகப் பிரிந்து அந்தந்தச் சாதித் தலைவர்களின் நாட்டாமைப் பதவி வெறிகாரணமாக, அந்தச் சாதி அமைப்பை இறுகப்பிடித்துக் கொண்டு தங்களுக்குள் அடித்துக் கொண்டு மானம் இல்லாத பிறவிகளாக மாறியுள்ளனர். இராமாயணக் கதைப்படி இராமனுக்கு அடிமைச் சேவகம் செய்ய முற்பட்டு, தங்களுக்குள் அடித்துக் கொண்ட வாலி சுக்கிரீவக் குரங்குகள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இற்றைத் தமிழர்கள்.  பிராமணீயத்தை உயர்த்திப் பிடிப்போர் ஒவ்வொருவரும ஹிட்லரை விட மிகக் கொடிய மனப்பான்மை உள்ளவர்களாகவும், மிகக் கொடூரமான இனக் குற்றங்கள் (Racial crimes) செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். பிராமணீயத் தத்துவமும், பிராமணீயச் சமூக அமைப்பும் (Brahmanical Social Order) இந்தத் துணைக்கண்டத்தில் செய்த கொடுமைகள் பற்றிய வரலாற்று உண்மைகளை மக்கள் அறியச் செய்ய வேண்டும். முதலில் ஜோகனஸ் கூட்டன்பர்க் பேசுவார்.

கூட்டன்பர்க்: ஐயனே! நான் அச்சு எந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் பைபிள் புத்தகத்தைத்தான் கி.பி. 1455ல் அச்சடித்தேன். அந்தப் புத்தகத்தை எங்கள் மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் வாங்கிப் படிக்கலாம். சீகன்பால்க் தமிழில் அச்சு எழுத்துக்கள் உருவாக்கி, கி.பி. 1723ல் பைபிளை தமிழ்ப் புத்தகமாக வெளிக்கொணர்கிறார். அதனையும் யார் வேண்டுமானாலும் வாங்கிப் படிக்கலாம்.  பிராமணர்கள் தங்களையும் பிராமணரல்லாத மக்களையும் சேர்த்து இந்துக்கள் என்றும், இந்து மதம் என்றும் பெயரிட்டு அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்களுடைய வேதங்களையும், ஸ்மிரிதிகளையும் சூத்திரர்கள் படிப்பதற்கு இசைவு தெரிவிப்பதில்லை. மாறாக, மிகக் கொடுமையான தண்டனைகள் வழங்கினர்.

மனுநீதி காலத்தில் வேதங்களை படிப்பதற்கு வைசியர்களுக்கும் சத்திரியர்களுக்கும் ஓரளவு உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வேதங்களை சொல்லித் தரும் உரிமை அவர்களுக்கு கிடையாது. அது பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. (Law of Manu – Chapter X -Verse 1: “Let the three twice-born castes (varna), discharging their (prescribed) duties, study (the Veda); but among them the Brahmana (alone) shall teach it, not the other two; that is an established rule.” – Buhler).  இதுபோல ஒரே மதத்தைச் சார்ந்தவர்களில் ஒரு சாரார் மற்றொரு சாராரை அவமானப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய நிகழ்வு வேறு எந்த மதத்திலும் கிடையாது

புத்தகங்களை அச்சிடும் முறையை கண்டுபிடித்த காலத்தில் கூட இந்தத் துணைக் கண்டத்தில் வர்ண பேதம் மிகக் கடுமையாக நடைமுறையில் இருந்தது.  புத்தகம் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் மையை புனிதப்படுத்தும் முறை இருந்தது. கங்கையிலிருந்து புனித நீர் கொண்டு வந்து அச்சிடும் மையை புனித படுத்தினார்கள் என்றும் அப்பொழுது பேசப்பட்டது. 1830 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த பவானி சரண் பாண்டியோபாத்தியாயா என்பவர் ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலை அச்சிட்டு வெளிக் கொணர விழைகிறார். அப்போது அன்றைய வழக்கப்படி செய்தித் தாளிலே ஒரு விளம்பரம் தருகிறார். அதில் தான் ஶ்ரீமத் பாகவதம் என்ற நூலைப் பதிப்பிக்க இருப்பதாகவும் அப்படி பதிப்பித்தால் எத்தனை பேர்கள் வாங்குவீர்கள் என்று தெரிவிக்கவும் என்று விளம்பரம் செய்கிறார்.  அத்தோடு நில்லாமல் தனது புத்தகம் பிராமண அச்சுக் கோப்பாளர்களைக் (Compositors) கொண்டு தயாரிக்கப்படுவதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தார். (….“printed by Brahman compositors” (Page 203 – Print Areas: Book History of India – Swapan Chakravorty – Abhijit Gupta). And, “there was a talk of holy water from the Ganges being used to purify the ink” (ibid.). எந்த அளவுக்கு சூத்திர துவேஷம் பிராமணர்களிடம் இருந்தது என்பதற்கும் எந்த அளவுக்கு அவர்கள் சூத்திரர்களை ஆழமாக வெறுத்தனர் என்பதற்கும் இது ஒரு மிக வலுவான சான்று ஆகும்.

திருவள்ளுவர்: இப்போது, கி.பி. 1902 முதல் 1940 வரை, மைசூர் மன்னராக இருந்த நான்காவது கிருஷ்ணராஜ உடையார் பேசுவார்.

கிருஷ்ணராஜ உடையார்: ஐயனே! எனது ஆட்சிக் காலத்தில்தான், மைசூர் அரசாங்க அலுவலகங்கள் பிராமணர்களின் ஏகபோக அனுபவத்தில் இருப்பதைக் கண்டு அவற்றை Brahmin Colony என்று அழைத்தேன். இது பற்றி ஆராய நீதியரசர் மில்லர் தலைமையில் ஒரு குழு அமைத்துப் பல சீர்திருத்தம் செய்ய முயன்றேன். இது பொறுக்காமல், எனது திவான் விஸ்வேஸ்வரய்யா பதவி விலகினார். பிராமணர்களின் சூத்திர துவேஷத்தை நேரில் பார்த்தவன் நான். எனது ஆட்சிக்காலத்திற்கு முன் இந்த துவேஷம் மேலும் தீவிரமாக இருந்ததை நான் அறிவேன். முன்னர் அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுநர் (Compounders) பணியிடங்களுக்கு அனைத்து மக்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்தப் பணியிடங்களையும் பிராமணர்கள் தங்களுடையதாக்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, கி.பி. 1888ல் மைசூர் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் அரசு மருத்துவமனைகளில் மருந்து கலக்கிக் கொடுக்கும் மருந்தாளுநர் பதவிகளுக்கு பிராமணர்களையே நியமிக்க வேண்டும் என்றும் ‘கீழ்’ சாதியினரை நியமிப்பதால் அவர்களிடமிருந்து மருந்து வாங்கிக் கொள்ள ‘உயர்’சாதி இந்துக்கள் அருவருப்படைகிறார்கள் (felt a ‘repugnance’) என்றும் அத்தீர்மானம் கூறியது. அதாவது, ‘உயர்’ சாதி இந்துக்களைக் காரணமாகக் காட்டி, ‘கீழ்’ சாதி இந்துக்களின் உரிமைகளைப் பறித்து, பிராமணர்கள் ஆதாயம் அடைந்து கொள்வதற்காக ஒரு திட்டம் தீட்டி, அன்றைய சட்ட மன்றம் மூலமாக அந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்ட பிராமணர்களின் தந்திரம் இது. இதே சட்ட மன்றத்தில், 1897ஆம் ஆண்டில், வேறொரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. புகைவண்டிகளில், அன்று ஐரோப்பியர்களும், யுரேசியர்களும் பயணம் செய்ய தனிப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டது போல, பிராமணர்களுக்கும் தனியாக மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் ஒதுக்கப்படவேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது  (Page 40 & 261 – The Story of Integration – Vanaja  Rangasamy).

எந்த அளவுக்கு அன்று சூத்திர துவேஷம் பிராமணர்களிடம் வியாபித்திருந்தது என்பதையும், தங்களுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்ள சூத்திரர்களில் உள்ள ‘இடைப்பட்ட’ சாதியினரின் கோரிக்கைக்கு மதிப்பளிப்பது போல, அவர்கள் எவ்வாறு காய் நகர்த்தினர் என்பதும் இதில் கவனிக்கத் தக்கது.

ஆபிரகாம் லிங்கன்: ஆமாம், இது அவர்களின் வழக்கமான தந்திரம்தான். இடைப்பட்ட சாதியினர்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று காரணம் காட்டிய பிராமணர்கள், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் அந்தக் ‘கீழ்’ சாதி மருந்தாளுநர்களிடமிருந்து மருந்து வாங்கிக் கொள்ள எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்று சொல்லி இருக்கலாமே. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லையே. பிராமணர்களின் வழக்கமான, பிரித்தாலும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.

கிருஷ்ணராஜ உடையார்: ஆம். மக்கள் கூட்டத்தை ‘இவர்கள்’ ‘அவர்கள்’ என்று பிரித்து வைத்து,  ‘இவர்களுக்கு’ ‘அவர்களைப்’ பிடிக்கவில்லை என்று கூறி ஒரு பிரச்சினையை உருவாக்கிவிடுவதும், பின்னர் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வது போல் முன்வந்து அந்த இருவருக்கும் பலன் ஏதுமில்லாமல்,  தங்களுக்கு மட்டும் பொருளாதார ஆதாயம் தரும் விதத்தில் சட்டம் உருவாக்கிச் செயல்படுத்திக் கொள்வது பிராமணர்கள் பன்னெடுங்காலமாகச் செய்துவரும் தொழில் நுட்பமாகும். 1888ல் மட்டும் அல்ல. இன்றும் கூட, பூனைகளின் பூசலில் குரங்கு ஆதாயம் அடைந்துகொண்டிருப்பது ஒரு தொடர்கதைதான். இதில் வேறொரு வேடிக்கை என்னவென்றால், அரசுப் பணியிடங்களில் பிராமணர்களின் பங்கைக் குறைப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்ததால், என்னை சூத்திர அரசன் (Sudra king) என்று பொதுவெளியிலேயே அழைக்கலாயினர். இதனை விட வேடிக்கை என்னவென்றால், அனைவரும் இந்துக்கள் என்ற பெயரில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று பேசும் பிராமணர்கள், பிற வர்ணத்தாருக்கெதிராகச் செய்யும் சதிகளும் கொடுமைகளும் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் உபநிஷதம் ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரே குடும்பம்) என்று சொல்கிறது என்று கூறி வேதங்களும் உபநிஷதங்களும் புனிதமானவை என்பது போலப் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்.  ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் என்றால், அவர்கள் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் (Fraternity) இல்லாமல், தங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு உருவாக்கிக் கொள்வதும், ஒரு சிலர் மற்றவருக்கெதிராக தீண்டாமை எனும் மாபெருங்குற்றத்தைச் செய்வதும் ஏன் என்ற கேள்விகளுக்கு பிராமணர்கள் விடை தருவதில்லை. சூத்திரரான சிவாஜியைச் 1674ல் சத்திரியர் என்று அறிவித்தபின்னர், சிவாஜியின் வாரிசுகள் சத்திரியர்கள் அல்லர் என்றும் சூத்திரர்களே என்றும் 1924ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் முன் வாதிட்டனர். (“The Subordinate Judge finds on the evidence that the Tanjore Rajas were Sudras by caste. He has dealt with the evidence with great care and minuteness in paragraphs 1292 to 1599 of his judgment and I see no grounds to differ from him” – Maharaja of Kolhapur Vs. Sundaram Ayyar & 15 others – High Court of Madras – 21.01.1924 – Para 165). ஔரங்கசீப்பிற்கு எதிராக பல போர்களை நடத்திய சிவாஜி தனது படையில் பெருவாரியாக இருந்த ராமோஷி, மகர், மங்க் ஆகிய ஒடுக்கப்பட்ட சாதியினரைச் சேர்ந்த வீரர்களின் துணையோடுதான் அப் போர்களில் வென்றார். அந்தப் போர்களை சிவாஜி நடத்தி முடிக்கும் வரை, ஒரு சூத்திரன் எவ்வாறு போர்வீரன் என்ற சத்திரியன் வேலையைச் செய்யலாம் என்று கேட்காத பிராமணர்கள், சிவாஜி அரியணை ஏறும் நிலை வந்தபோது மட்டும், ஒரு சூத்திரன் எப்படி அரசன் என்ற சத்திரிய பதவியை அடைய முடியும் என்று கேள்விக்கணை தொடுத்தனர். சூத்திர துவேஷம் அவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது பிராமணர்களிடம்.

கலீல் ஜிப்ரான்: அப்படி என்ன எதிர்ப்பு தெரிவித்தனர் பிராமணர்கள்?

கிருஷ்ணராஜ உடையார்: கி.பி.1674ல் ஜூன் மாதத்தில் அவர்கள் சிவாஜி அரியணை ஏறுவதைத் தடுக்கப் பயன் படுத்திய வாதங்கள் வெறித்தனமானவை. அவருடைய கொள்ளுத்தாத்தா உழவுத் தொழில் செய்தவர்தான் என்றும், புதுப்பணக்காரன் போல சூத்திரக் கூட்டத்திலிருந்து வந்திருக்கும் சிவாஜி சத்திரியனாக முடியாது என்றும் கூறித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். (“The Bhonslas were popularly known to be neither Kshatriya nor of any other twice-born caste, but mere tillers of the soil, as Shivaji’s great-grandfather was still remembered to have been. How could an upstart sprung from such a Shudra (plebeian) stock aspire to the rights and honours due to a Kshatriya?” (As quoted from a book of Jadunath Sarkar in Para 195 of the order in Maharaja of Kolhapur Vs. Sundaram Ayyar & 15 others – High Court of Madras -21.01.1924).  அதன் பிறகு ஆயிரக்கணக்கான பிராமணர்கள் அன்றைய தேதியில் கொள்ளை கொள்ளையாக நகைகளும் பணமும் வாங்கிக் கொண்டு சிவாஜி அரியணை ஏறுவதற்கு ஒத்துக் கொண்டனர். (“It is a matter of history that Sivaji paid four lakhs of rupees to Gaga Bhat, a Brahmin of Benares, in order to have his upanayanam (thread marriage) performed when he was 47 years of age, and to be raised to the rank of a Kshatriya at the time of his coronation”.(As quoted in the order of the High Court of Madras – Para 45 – ibid.). “Much wealth was distributed in charity. Fifty thousand Brahmans learned in the Vedas were assembled from the home provinces, as well as from foreign territories and holy places of great sanctity. They were all made to stay. Every day they were fed with sweets. Then for the coronation a throne was made . . . jewels of great value were sought from among the nine varieties of priceless jewels that were in the treasury, and set in the throne. Many gold lotuses inlaid with gems of nine varieties and various other gold flowers and clothes were distributed in abundance…. To Gaga Bhat (who had officiated as) the chief priest was given immense wealth. The total expenditure amounted to one Kror and forty-two lakhs of Hons” ( As quoted in Para 197-ibid.).

லியோ டால்ஸ்டாய்: ஔரங்கசீப்பினுடைய பெரும் படையை எதிர்த்து வென்ற சிவாஜியால் இந்த பிராமணர்களை கட்டுப்படுத்தி இருக்க முடியாதா? வாயை பொத்திக்கொண்டு சும்மா இருங்கள் என்று  ஒரே வார்த்தையில் அடக்கி இருக்கலாமே?

கிருஷ்ணராஜ உடையார்: அரசாங்கத்தின் உயர்மட்டப் பணியிடங்களில் பிராமணர்களின் பெரும்பான்மை ஆதிக்கம் இருக்கும் வரை எந்த அரசனும் அவ்வளவு எளிதாக அவர்களைப் புறக்கணித்து விட முடியாது.  இந்த அதிகார மையங்களை பிராமணர்கள் தங்களது இனத்தின் நலனுக்காக எல்லா விதங்களிலும் பயன்படுத்தி கொண்டனர் என்பது தான் வரலாறு காட்டும் உண்மை. இந்தச் சதுர் வர்ண அமைப்பு பிராமணர்களுக்கு அளவில்லா அதிகாரத்தை  வழங்குகிறது. அது மட்டுமின்றி அளவில்லா அதிகாரம் அரசனுக்கு இருப்பதே அவன் அவற்றின் மூலம் பிராமணர்களுக்கு சேவை செய்யத்தான் என்று பிராமணர்கள கருதினர். “Thus the social ideal of the Brahmins was the unlimited power that hierarchy conferred and the strict separation of castes. …Various useful callings were in this rigid society branded as sinful.. Highest claims were made by the Brahmins, and they were also the recipients of the most extravagant privileges.This went on to such an extent that even the unlimited authority of the king was considered to be at their service” (Page -16 – Jainism in North India – Chamanlal J. Shah – Longmans – 1932). கோலாப்பூர் அரசர் சாகு மகராஜ் 1884 ஆம் ஆண்டு அரியணை ஏறும் பொழுது திலகர் தன்னுடைய கேசரி என்ற நாளிதழில் “இந்துத்துவத்தை பெருமையாக கருதுவதும் இந்துத்துவத்தின் வளமைக்கு பாடுபடுவதும் கோலாப்பூர் ஆட்சியாளர்களின் பரம்பரை கடமையாக இருந்து வந்திருக்கிறது” என்று எழுதினார் (“To take proper pride in Hindutva and strive for its prosperity is the hereditary duty of the Kolhapur rulers” -Bal Gangadhar Tilak’s message to the king (on the ascension of King Sahu to the throne of Kolhapur) – Kesari – 03.04. 1884). அது அன்று திலகர் கோலாப்பூர் அரசருக்குக் கொடுத்த எச்சரிக்கையாகும். அதனால்தான், சாகு மகராஜ் தனது திவான் பணியிடம் முதலாகப் பல முக்கியப் பணியிடங்களில் பிராமணரல்லாதோரை நியமித்து திலகருக்குத் தனது செயலால் விடையிறுத்தார்.  பிராமணக் கொடுமைகளை தனது வாழ்நாள் முழுவதும், மன்னராவதற்கு முன்பும், மன்னரான பிறகும், தொடர்ந்து எதிர்த்து நின்று வென்று காட்டியவர் கோலாப்பூர் மன்னர் சாகு மகராஜ். நான் மைசூர் அரசாங்கப் பணியிடங்களில் பிராமணர்களின் ஏகபோகத்தைத் தகர்க்க நடவடிக்கை எடுத்தபோது, எனது திவான் விஸ்வேஸ்வரய்யா அதனை எதிர்த்து இனவெறியோடு பேசியது கண்டு அதிர்ந்தேன். ஆனாலும், அவருடைய அழுத்தங்களுக்கு இடம்தர மறுத்தேன். அவரையே பதவிவிலக வைத்தேன். ஒரு அரசன் அனைத்து மக்களுக்குமான அரசாக தனது அரசு விளங்கவேண்டும் என்று நினைப்பானேயாகில், அவன் செய்ய வேண்டிய முதல் செயலாவது,  அரசாங்கத்தின் உயர்நிலைப் பணியிடங்களில் பிராமணர்களின் ஏகாதிபத்தியத்தைத் தகர்த்து, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அரசுப் பணியிடங்களில் உரிய பங்கினை கொடுப்பது மட்டுமே. அப்போதுதான், எந்த அரசனும் பிராமணர்களின் சதிச் செயல்களிலிருந்து தப்பிக்கவும் பிராமணர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நின்று அனைத்து மக்களையும் காக்கும் பணியைச் செய்யவும் முடியும். இது கோலாப்பூர் மன்னர் சாகுவும் நானும் எங்கள் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. அவ்வாறு செய்யாமல், தேவையான முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், தன்னைச் சுற்றி இருக்கின்ற அதிகார மையங்கள் அனைத்தையும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, பேசும்போது மட்டும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க முடியாது என்றும், தான் தான் அரசன் என்றும், தனது கட்டுப்பாட்டில்தான் பிராமணர்கள் இருக்கவேண்டும் என்றும், கடவுளைக்காட்டி பிராமணர்கள் தன்னைப் பயமுறுத்த முடியாது என்றும் தன்மானத்தோடு கூறிய  வேணா என்ற மன்னனை பிராமணர்களால் எவ்வாறு நேரடியாகப் படுகொலை செய்தார்கள் என்று ஶ்ரீமத் பாகவதம் மிகமிக விவரமாகக் கூறுகிறது. பிராமணர்களின் சூத்திர  துவேஷம் அத்தன்மைத்தானது.

திருவள்ளுவர்: இது பற்றி வேணாவிடமே கேட்போமே!

வேணா: ஐயனே! கி.பி. 1658ல் ஐரோப்பாவில் போப் வலியவரா அல்லது அரசர்தான் வலியவரா என்ற மிகப்பெரிய பிரச்சினை உருவெடுத்தது. இந்தப் பிரச்சினையை உருவாக்கியவர்கள் மதகுருமார்கள்தாம். ஆனால், இந்தத் துணைக்கண்டத்தில் பிராமணர்கள் மதகுருமார்கள் என்ற பெயரில் இதே பிரச்சினையை வேதகாலந்தொட்டே உருவாக்கிவிட்டனர். கிறிஸ்தவ மதத்தில் மதகுருமார் மட்டும்தான் இந்த அதிகாரப் போரில் இறங்கினர். ஆனால், இங்கோ, பிராமணர் அனைவருமே, தங்களை மதகுருமார்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டனர். அனைத்துப் பிராமணர்களுமே அதிகாரமையங்களைப் பிடித்துக் கொண்டனர். அரசர்களை, பிராமண வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஆட்டி வைத்தனர். அரசுப் பணத்தை பிராமணர்களுக்கு வாரிவாரி வழங்கிக்கொண்டேயிருக்கவேண்டும் என்றனர். சமுதாயத்தில் குற்றங்கள் பெருகிக்கொண்டேயிருக்குமாறு செய்தனர். ஏனெனில், குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்துத் தண்டனை அளிக்கும் போது, அந்த அபராதத் தொகை பிராமணர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதுதான் சட்டம் என்று கூறினர். (Manu Chapter IX: Verse 323: A king (who feels his end drawing nigh) shall bestow all his wealth, accumulated from fines, on Brahmanas, make over his kingdom to his son, and then seek death in battle.) எனவே, சமூகத்தில் அதிகக் குற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருக்குமானால், பிராமணர்களுக்கு அதிக வருமானம் வரும் என்று அவர்கள் கணக்கிட்டனர். அரசன் தவறாக தண்டனை கொடுத்து அதற்குப் பிராயச்சித்தம் செய்தால், அதுவும் பிராமணர்களுக்கு வருமானமாக ஆகியது. (Arthasastra says, “When a king punishes an innocent man, he shall throw into water dedicating to God Varuna a fine equal to thirty times the unjust imposition; and this amount shall afterwards be distributed among the Brahmins. By this act, the king will be free from the sin of unjust imposition”  – Page 268 – Book IV – Chapter VIII- Shamasastry.). எனக்கு இந்தக் கொடுமைகளெல்லாம் உடன்பாடானவையாக இல்லை. எனவே, பிராமணர்களை மற்ற மக்களுக்குச் சமமானவர்களாகவே பாவித்து நடத்தலானேன். இது தவறா? ஆனால், அவர்கள் சதிசெய்து என்னைக் கொலை செய்து விட்டு, எனது மகனை அரசனாக்கி அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். இராமாயணத்தில் வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்கிரீவனை அரசனாக்கியது போல, என்னைக் கொன்றபின் எனது மகன் பிரிதுவை அரசனாக்கிவிட்டதால், பொதுமக்களுக்கு அன்றைய நிலையில் பிராமணர்கள் செய்த சதிச்செயல் தெரியாமல் போய்விட்டது.

காந்தியடிகள்: அப்படி என்னதான் நடந்தது?

வேணா: அப்போது நடந்தவை என்ன என்பது பற்றி விலாவாரியாக, ஶ்ரீமத் பாகவதத்தில் எட்டுப் பக்கங்களுக்கு எழுதிவைத்துள்ளனர். (Pages 61 to 68 – Srimad Bhagavata –  A. M. Srinivasachariar – Translation by V. Raghavan – G.A. Natesan & Co – 1937) . அதனைப் படித்தாலே அந்தக் கொலை பற்றிய உண்மைகள் பல விளங்கும். எனது தந்தை அங்கன் என்ற அரசர் ஆவார். அவர் என்னையும் எனது தாயையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார். எனவே, நான் அரசனானேன். அதன்பின் பிராமணர்கள் யாகம் (யஷ்டவ்யம் – sacrifices) செய்யக் கூடாது என்றும் ,இனாம் (தாத்தவ்யம் – gifts) வாங்கக்கூடாது என்றும், நிவேதனம் (ஹோத்தவ்யம்-oblations) செய்யக் கூடாது என்றும் கட்டளையிட்டு, அனைத்து மக்களும் இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, நாடெங்கும் முரசறைவித்துத் தெரிவித்தேன். இவை ஒன்றும் நான் புதிதாகச் செய்தவை அல்ல. எனக்கு வெகு காலத்துக்கு முன்பே அசோகர் இவ்வாறெல்லாம் செய்திருக்கிறார். அதனால் அன்று அசோகருக்கு எதிராக அணி திரண்டனர் பிராமணர்கள். Haraprasad Sastri says about Asoka, “He put a stop to all animal sacrifices throughout his vast empire….This is an order which was certainly directed against the Brahmins, a privileged class wherever they were settled…This was followed by another edict in which Asoka boasted that those who were regarded as gods on earth have been reduced by him in a short time into false gods. If it means anything, it means that the Brahmanas, who were regarded as Bhudevas or gods on the earth, had been shown up by him… The appointments created by Asoka of Dharma Mahamatras – that is the superintendent of morals – was a direct invasion of the right and privileges of the Brahmanas. They were not the persons to brook the injury done to them quietly. And to crown all, Asoka, in one of his edicts, insisted upon all his officers strictly observing the principle of  Danda-samata and Vyavahara-samata – that is, equality of punishments and equality in lawsuits, irrespective of caste, colour and creed. Under such circumstances, the prospects of being huddled together in prison with unspeakable non-Aryans, whipped, impaled alive and hanged, were very offensive to the highly educated, respectable and privileged community. They tolerated the indignities heaped on them as long as the strong hand of Asoka was guiding the empire… They began to cast their eyes for a military man to fight for them, and they found such a man in Pushyamitra, the commander in chief of the Maurya empire… He was the Brahmanist to the core and hated the Buddhists”. (Page 250 to 260 – JPASB- Haraprasad Sastri – 1910 & Page 176 – Jainism in North India – Chamanlal J. Shah – Longmans – 1932). Asoka was non-sectarian. His Baraber cave inscriptions said very clearly, “Whoever praises his own sect or blames other sects – all (this) out of devotion to his own sect – if he is acting thus, he rather injures his own sect very severely” (Page 143  – ibid.). நானும் அசோகர் செய்தது போலவே மதவெறியர்களை அடக்கினேன். எனவே, எனக்கும் எதிராக பிராமணர்கள் அணிதிரண்டனர். என்னைப் பற்றி வழக்கம்போல அவர்களுடைய பிரச்சாரக் கருவிகளைப் பயன்படுத்தி என்னைக் கொடியவன் போலச் சித்தரிக்க முயன்றனர். என்னிடம் வந்து மக்கள் நலம் பேண நான் தர்மத்தை பேண வேண்டும் என்றும் தர்மம் அழிந்துவிட்டால் அரசன் தனது அதிகாரத்திலிருந்து கீழே விழுந்து விடுவான், இறைவனை வழிபடும் மக்கள் வாழ்கின்ற நாட்டின் அரசனைக் குறித்து இறைவன் மகிழ்ச்சி அடைவார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் அவர்களுக்கு எனது பதிலைச் சொன்னேன். “ஒன்று நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது அதர்மத்தை தர்மம் என்று கற்பனை செய்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.   உங்களைப் பராமரிக்கும் கணவரை விட்டுவிட்டு இரகசியமாக கள்ளக் காதலரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்று கூறினேன். “மற்றவர்களை வாழ்த்துவதற்கோ சபிப்பதற்கோ சக்தி உள்ள விஷ்ணு, பிரம்மா, சிவன், இந்திரன், வாயு, எமன், சூரியன் ஆகியோரும் மற்ற கடவுளர்களும் அரசனுடைய உடலில் இருக்கிறார்கள். அரசன்தான் அனைத்து கடவுளர்களின் மொத்த உருவம். எனவே என்னை வெறுக்காமல் பிராமணர்களாகிய நீங்கள் யாகங்கள், பூசைகள் ஆகியவை செய்து என்னை வணங்குங்கள்” என்று கூறினேன். இதனால் தாங்கள் ஏளனப்படுத்தப்பட்டதாக உணர்ந்த அந்த பிராமணர்கள் கோபம் தலைக்கேறி ‘ஹம்’ என்ற சத்தத்தோடு கூட்டாகச் சேர்ந்து என்னைக் கொலை செய்தார்கள். (Page 65 – Srimad Bhagavata –  A. M. Srinivasachariar – Op. cit.).

மறைமலை அடிகள்: ஆட்சியாளர்கள் பிராமணீயத்தை எதிர்த்தால் அவர்களைத் தீர்த்து கட்டி விடுவது என்பது சாணக்கியன் காலத்திலிருந்து பிராமணர்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயலாகும்.  இன்று இந்தியப் பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் நுழைவாயிலின் அருகே, உலகின் முதன்முதல் அரச பயங்கரவாதியான, சாணக்கியனின் படத்தை வரைந்து வைத்திருப்பது, இந்த ஆட்சியாளர்கள் சதிசெய்யும் பழக்கம் உடையவர்கள் என்பதையும், பயங்கரவாதச் சிந்தனை உள்ளவர்கள் என்பதையும் காட்டுகிறது. சாணக்கியன் படம் அங்கு வரையப்பட்டிருப்பதே, அதிகார வரம்பை மீறிய செயல்தான். இதிலிருந்தே, எந்த ஒரு நாட்டிலும், அதிகார மையங்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாரிடம் மட்டும் இருந்தால் மனித சமுதாயத்திற்கெதிரான கொடுமைகள் நடக்கத்தான் செய்யும் என்ற உண்மை விளங்கும். எனவே, இன்றைய இந்தியாவில் அதிகார மையங்களில் பிராமணர்களின் பங்கைக் குறைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டும்.

கிருஷ்ணராஜ உடையார்: அதிகார மையங்களில் பிராமணர்களுக்கு மிக அதிகமாக இடம் கொடுத்திருந்ததால்தான், வெள்ளையர்களே கூட பிராமணர்களின் அழுத்ததிலிருந்து வெளிவர இயலாமல், மிகவும் அநாகரிகமான ஒரு சட்டத்தை கி.பி. 1795ல் (Regulations of 1795) இயற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.   காசி நகரில் உள்ள பிராமணர்கள் என்ன குற்றம் செய்திருந்தாலும், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கிடையாது என்று அந்த சட்டம் கூறியது. இச்சட்டத்தினால் விளைந்த பல அநியாயங்களைப் பார்த்த பிறகு, 1817 முதல்தான், வெள்ளையர்கள் பிராமணர்களின் தனி உரிமைகளை மறுக்கத் தொடங்கினர். எனவே, மேல்நிலை அதிகார மையங்களில் பிராமணரல்லாத அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிய விகிதாரப் பங்கீடு பெற அம்மக்கள் உடனடியாகச் செயல்படுவதுதான் இன்றைய இந்தியா எதிர்காலத்தில் நாகரிகம் உள்ள நாடாக விளங்க வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் உயர்நிலைப் பணிகளின் முக்கியத்துவத்தை பிராமணரல்லாத மக்கள் காலம் கடந்தே உணர்ந்தனர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், வெள்ளையர் காலத்தில் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், அக்கல்வியின் பயனாக மேல்நிலைக்கு வந்த பிராமணரல்லாத சிந்தனையாளர்கள்தாம் அரசுப் பணியிடங்களை பிராமணர்கள் அபரிமிதமாகப் பறித்துக் கொள்வதையும் அதனால் ஏற்படும் தீய சமுதாய விளைவுகளையும் உணர்ந்து, இனியேனும் அரசுப் பணியிடங்களில் பிராமணரல்லாத மக்களுக்கு உரிய பங்கைப் பெறவேண்டும் என்றும் உணரத் தொடங்கினர். பின்னர் அது தொடர்பாகப் பலர் ஒன்று சேர்ந்து ஒருமித்த நடவடிக்கையும் எடுக்கலாயினர். அதுதான் பிராமணர்களின் வன்பிடியிலிருந்து இம்மண்ணின் மைந்தர்களை விடுவிக்கும் சரியான முதல் அரசியல் செயல்பாடாக (Political action) அமைந்தது. 1913 ஆம் ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்த 128 மாவட்ட நீதிபதிகளில், 93 பேர் பிராமணர்கள், 25 பேர் பிராமணரல்லாதோர் என்று, அன்றைய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்பு அலெக்சாண்டர் கார்டூ (Alexander Cardew) என்ற அன்றைய ஐ.சி.எஸ். அலுவலர் அறிக்கை தாக்கல் செய்தார். இவ்வறிக்கையைக் கண்ட, பிராமணரல்லாதோரின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, பின்னாளில் மாண்டேக்- செம்ஸ்போர்டு அறிக்கை (Report on Indian Constitutional Reforms) தயாரித்த, எட்வின் மாண்டேகைச் (Edwin Samuel Montague) சந்தித்து, பிராமணரல்லாதோருக்கு அரசுப்பணிகளில் உரிய பங்கைத்தரவேண்டும் என்று கோரினர். பின்னர்தான், 1916ல் நீதிகட்சி உருவானது. இன்று, அதாவது 110 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலைமை 1913ல் இருந்ததைவிட மோசமாகத்தான் இருக்கிறது. இது அந்நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.

திருவள்ளுவர்: இப்போது காந்தியடிகள் பேசுவார். (தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *