வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் கும்பகோணத்தில் தமிழர்கள் கட்டிய அருள்மிகு நாகேசுவரசாமி கோயிலின் கொடிமரத்தருகே உள்ள உட்பிரகாரச் சுவரில், தமிழுக்கெதிரான வேதத்தை உயர்த்திப் பிடித்து வரும் காஞ்சிமடத்துத் தலைவர்களின் படத்தைச் சட்டவிரோதமாக வரைந்து வைத்திருப்பது பற்றிக் கவலை தெரிவித்திருந்த அவையோர் இந்த அமர்வில் அவைத்தலைவரான திருவள்ளுவர் எதுபற்றிப் பேசவிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அமர்ந்திருந்தனர். சற்று நேரம் கழித்து திருவள்ளுவர் பேசலானார்)..

திருவள்ளுவர்: அன்பர்களே! இன்று இந்தியாவில் உள்ள ஆரியர்கள் தாங்கள் மிகவும் வீரியத்துடன் செயல்படுவதாக நினைத்து மேலும் மேலும் மனித குலத்திற்கே விரோதமான பல செயல்களை அடுக்கடுக்காகச் செய்ய முனைந்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் நாம் சென்ற அமர்வில் கண்ட அருள்மிகு நாகேசுவரசாமிக் கோயிலில் வரையப்பட்டுள்ள சங்கராச்சாரிகளின் படங்கள். இப்படங்கள் அந்தக் கோயிலில் வரையப்படத் தகுதியில்லாதவை. இப்படங்களை வரைந்தவர்களின் நோக்கம் சிவன் கோயில்களைக் காலப்போக்கில் சங்கராச்சாரிகளின் கோயில்களாக மாற்றுவது ஆகும். ஆரியர்களின் வரலாறு இவ்வாறான பல கடத்தல் செயல்களின் தொகுப்பே ஆகும்.

அன்று இசையை மிகவும் இழித்துரைத்தனர் மனுவின் காலத்து ஆரியர்கள். (“Let the student abstain …from anointing (his body), applying collyrium to his eyes, from the use of shoes and of an umbrella (or parasol), from (sensual) desire, anger, covetousness, dancing, singing, and playing (musical instruments)” – Verse 178 – Chapter II – Law of Manu. “Let him not dance, nor sing, nor play musical instruments, nor slap (his limbs), nor grind his teeth, nor let him make uncouth noises, though he be in a passion” – Verse 64 – Chapter IV – Law of Manu. ) Also, Verse 210 of Chapter IV and Verse 47 of Chapter VII. ) இசையின் வலிமை தெரிந்தபின்னர், தமிழ் இசையை ஆரியமாக்க, தமிழ்ப் பண்களின் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மாற்றிவிட்டுத் தமிழிசையைக் கடத்திச் சென்றனர்.

இசை கடத்தல்

இன்னோசைகள் உள்ளத்திற்கு இன்பம் பயப்பன. அந்த இன்னோசைகளை மெலித்தல், வலித்தல், நீட்டல் (Elongation), குறுக்கல் ஆகிய வழிகளைக் கைக்கொண்டு உருவாக்கி,  முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கும்போது, அவை முறையான இசையாகின்றன. அவ்வறான முறைப்படுத்தப்பட்ட இசையை மாந்தனின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கியது தமிழ்க் குமுகாயமே. அவ்வாறான இசை வாய்மூலமானதாக மட்டுமின்றி, பலவித இன்னோசை தரும் இசைக்கருவிகளாலும் உருவாக்கப்பட்டு வாய்ப்பாட்டிற்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.இவ்வாறான இசையுடன் தோன்றியதே ஆடற்கலை. மனிதன் ஆடுவது என்பது, தாள் எனும் காலடிகளால். ஆடும் விதத்தை, தாள் வைக்கப்படும் விதங்களை முறைப்படுத்தி, தாளம் என்று வகைப்படுத்தினர் தமிழர்கள். தாளத்திற்கேற்பத்தான் பாட்டுக்கட்டலாயினர். அந்த நிலையில் உருவானதே முத்தமிழில் இரண்டாம் தமிழான இசைத்தமிழ்.

காலங்காலமாக இசைத்தமிழை உருகி உருகி வளர்த்தவர்கள் தமிழர்கள். அவர்கள் உருவாக்கிய எண்ணற்ற இசைக்கருவிகளில் குழலும் யாழும் மிகமிகத் தலையாயவை. அதனாற்றான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திருக்குறளில் இந்த இரண்டு இசைக்கருவிகளின் முகாமைத்துவத்தை, ‘குழலினிது யழினிது என்ப’ என்று பதிவுசெய்துள்ளேன். எனது காலத்திலேயே முறைப்படுத்தப்பெற் இசைத்தமிழின் வளர்ச்சி அவ்வளவு இருந்திருக்கிறது என்றால், அந்த இசைத்தமிழ் தோன்றிய காலமும் அது வளர்ந்த காலமும் எவ்வளவு ஆண்டுகள் என்பது கற்பனைக்கு எட்டாததே.

அவ்வாறு இசை வளர்த்து, இசையில் விற்பன்னர்களாகத் தமிழர்கள் திகழ்ந்து வந்தனர். “பாணர், பாடினியர், விறலியர் போன்றோர்  பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர்.” குழல், யாழ், கின்னரம்,வாங்கியம்,சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான பல்வித இசைக்கருவிகள் இருந்துள்ளன.தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையில் 18ஆம் பாடல் தமிழ்நெறியின் பண்பாட்டுக் கருப்பொருள்களான இசைக்கருவிகள் பற்றி விளக்குகிறது. தமிழ்ப்பண்ணிசை, மிடற்றிசை (வாய்ப்பாட்டு), நரம்புக் கருவியிசை (யாழ்) குழற்கருவியிசை (குழல், வாங்கியம்), முழவிசை (மத்தளம், தண்ணுமை, கொட்டு, பறை) ஆகியவை தமிழிலிருந்தும் தமிழர் வாழ்வு நெறியிலிருந்தும் பிரிக்கமுடியாதவை.

பின்னர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வடக்கிலிருந்து கோதாவரிக்கரைக்கு வந்த ஆரியர்களான பிராமணர்கள்  தமிழைப்பிரித்து அந்தப் பகுதியில் அதைத் தெலுங்காக மாற்றினர். தாங்கள் உருவாக்கியதான, ஒன்றுக்கும் பயனில்லாத, சமஸ்கிருதத்தின் வடிவில் புதிய எழுத்துக்களை தெலுங்குக்குக் கொடுத்து வடிவமைத்தனர். அவ்வாறே, பத்தாம் நூற்றாண்டில், கருநாடகப்பகுதித் தமிழைப்பிரித்துக் கன்னடமாக மாற்றினர். பதினொன்றாம் நூற்றாண்டில் மேற்குத் தமிழ்நாட்டுப் பகுதியை மலையாள மொழிபேசும் பகுதியாக மாற்றினர். இவற்றுக்கெல்லாம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் ஆங்காங்கே அதிகார மையங்களைக் கைப்பற்றுவதும் அவற்றின் மூலம் எண்ணற்ற சதிச்செயல்கள் செய்வதும்தாம்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையார்தான் இசைத் தமிழின் முதல் இயலிசைப் புலவர் ஆவார். இவர் பாடிய திருவாலங்காட்டுத் திருப்பகங்கள் இரண்டும் (மூத்த திருப்பதிகங்கள்)  நைவளப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் அமைந்த இயலிசைப்பா பதிகங்களாகும். இவர் பாடிய இப்பண்கள், “அவரது காலத்திற்குப் பின்னால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் இசையை வளர்த்தவர்களுக்கு முன்னோடியாக விளங்கின”. இப்பண்கள் இன்றும் பாடப்பெறுகின்றன.

காரைக்கால் அம்மையாரின் பனுவல்களில் முதற் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில்,  ஏழு இன்னோசைகளுக்குமான தமிழ்ப்பெயர்கள் பதிவாகியுள்ளன. ‘துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை’ என்பது அப்பகுதி.  அப்பாடலின் பொருள் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அந்தப்  பண்களின் தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருவாலங்காடேயாகும் என்பதாகும்.

“துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு, தகுணிதந் தந்துபி தாளம்வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே”.

இவ்வினிய தமிழ்ப்பண்களை, அதுவரை இசையை வெறுத்திருந்த ஆரியம் கடத்திச்சென்று `சப்தஸ்வரங்கள்’ என்று பெயர் மாற்றிக்கொண்டது, “பண் ஒன்றிய பாடல்கள் என்பன, இசை மற்றும் தாளக்கட்டமைப்புடன் பாடப்பெற்ற இசைப் பாடல்களாகும்”. இவை காரைக்கால் அம்மையாரால் உருவாக்கப்பெற்றவையாகும். இது தொடர்பான எண்ணற்ற வரலாற்று உண்மைகள் பேராசிரியை திருமதி. ஞானாம்பிகை குலேந்திரன் எழுதியுள்ள “காரைக்காலம்மையார்: தென்னிந்திய இசையின் தாய்” என்ற நூலில் விரவிக்கிடக்கின்றன. (Published by the Department of Tamil Development – Culture, Government of Tamil Nadu- 1996).  இந்த நூலில் கண்டிருந்த உண்மைகளை ஏற்று, தமிழக  அரசு, 1995ல் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் காரைக்காலம்மையார் “தென்னிந்திய இசையின் தாய்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாஆவார்.

தமிழரின் தமிழிசை தொடர்பான அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்க, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நமது காரைக்காலம்மையாரை விட்டுவிட்டு, நமது திருவையாற்றுத் தமிழ் மண்ணில், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தமிழை வெகு தீவிரமாக வெறுத்தொதுக்கியவருமான தியாகப்பிரம்மத்தை இசைவிற்பன்னராகக் காட்டி விழாவெடுப்பதையும், அந்த விழாக்களில் நமது தமிழிசை  புறக்கணிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.

நாள், கிழமை, ஆண்டுகள் கடத்தல்

இதுபோல ஆரியக்கடத்தல்காரர்கள் செய்த வரலாற்றுக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் நாள், கிழமை, விண்மீன்கள் முதலானவற்றின் பெயர்களைக் கடத்தினர். பொங்கல் நாளில் தொடங்கிய தமிழ்ப் புத்தாண்டை, 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்திற்குக் கடத்தினர். 15.01.1609ல் மதுரையிலிருந்து இராபர்டோ டி நொபிலி எழுதிய கடிதத்தில் “இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், பொங்கல் என்று அழைக்கப்பெறும், புது அரிசியை இறைவனுக்குப் படைக்கும் மிக மேன்மையான பண்டிகை ஒன்றைக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். இந்தப் பண்டிகையைக் கொண்டாட இயலவில்லை என்றால் அது அவமானம் என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று தொடங்கி அப்பொங்கல் பண்டிகை பற்றி மிக விரிவாக எழுதுகிறார். (“The Hindus,” writes Nobili to Laerzio of the Pongal in 1609, “are accustomed, at the beginning of each year, to celebrate a very solemn festival, called Pongal, to offer the new rice to the gods. It consists in cooking with great ceremony their rice mixed with milk, before an idol. According to them, it is a disgrace not to be able to celebrate that festival.” –Page- 116- A Pearl to India: The Life of Roberto de Nobili – Vincent Cronin. Also in Page 115 ibid.).

ஊர்ப் பெயர்கள் கடத்தல்

திருக்கழுங்குன்றம் என்ற பெயரை பக்‌ஷிதீர்த்தம் என்றும், திருவானைக்கா என்ற பெயரை ஜம்புகேஸ்வரம் என்றும், மயிலாடுதுறையை மாயூரம் என்றும், குடந்தையைக் கும்பகோணம் என்றும், திருவரங்கத்தை ஶ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூரை ஶ்ரீவில்லிபுத்தூர் என்றும், பொன்னம்பலத்தைக் கனகசபையென்றும், திருமுதுகுன்றத்தை விருத்தாசலம் என்றும் மாற்றி ஊர்ப்பெயர்களைக் கடத்தி வரலாற்றைத் திரிக்க முயன்றனர் அதே ஆரியர்கள்.

தாயுமானவனை மாத்ருபூதம் என்றும், முருகனை சுப்ரமணியன் என்றும், கருந்தார்க்குழலி அம்மையைச் சூலிகாம்பாள் என்றும், (திரு+கரு+கா+ஊர்) கருகாக்குமம்மையை கர்பரக்‌ஷாம்பிகா என்றும், தாயம்மையை ஜகதாம்பிகா என்றும், மாணிக்கவண்ணரை இரத்தினகிரீஸ்வரர் என்றும், வண்டுவார் குழலியை ஆமோதாளகநாயகி என்றும், பழமலை நாதரை விருதகிரீஸ்வரர் என்றும், மரைக்காடரை வேதாரண்யர் என்றும் யாழைப்பழித்தமொழியம்மையை வேத நாயகி என்றும், திருத்தாளமுடையாரை சப்தபுரீஸ்வரர் என்றும், ஓசைகொடுத்த நாயகியம்மையை தொனிப்ரதாம்பாள் என்றும் மாற்றி, தமிழ்க் கோயில்களில் உள்ள கடவுளர் பெயர்களைக் கடத்தினர்.

கோயில்களையே கடத்துதல்

இன்று நாகேசுவரசாமிக் கோயில் செயல்பாடு மூலமாக கோயில்களையே கடத்த முயலும் அளவுக்கு தங்கள் கடத்தல் தொழிலில் முன்னேறியுள்ளனர், இந்த ஆரியர்கள். அக்கோயிலில் இப்போது வரையப்பட்டிருப்பது காஞ்சி மடத்துத் தலைவர்களின் ஓவியம் அல்ல; அது தமிழர்களின் பண்பாட்டை நிறுவும் அடையாளமான சிவன் கோயிலையே கடத்திச் சென்று தமிழரின் வரலாற்றையும் கடத்த முயலும் ஒரு கூட்டம் கையிலெடுத்துள்ள, சட்டவிரோதமான, ஆயுதம் ஆகும்.  இந்த மாபாதகக் கடத்தல் விரைவில் தடுக்கப்பெற்றுவிடும் என்று தெரிகிறது. அந்தக் கடத்தலைத் தடுப்பதன் மூலம், தமிழ் வாழும்! தமிழ் கூறு நல்லுலகமானது, தமிழைக் கண்டு அஞ்சுகின்ற சதுர்வர்ண வெறியர் (Apartheidists) கூட்டத்தை அடக்கி வைக்கும். தமிழால் மட்டுமே அவர்களை அவ்வாறு அடக்கமுடியும்; அதன்மூலமாக இவ்வுலகையே அன்பு சார் நல்லுலகாகத் தமிழ் மாற்றும்!!

(அப்போது, அவையிலிருந்த வரலாற்றறிஞர் வின்சென்ட் ஸமித் (Vincent Smith) பேச விழைகிறார். திருவள்ளுவர் அவரைப் பேசுமாறு கோருகிறார்).

வின்சென்ட் ஸ்மித்: ஐயனே! இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைக் காணும்போது, பிராமணர்கள் செய்ய முயன்ற வரலாற்றுத் திரிபு முயற்சிகளே ஒரு வரலாறாக அமைகிறது. பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றின்படி உலகின் முதல் பயங்கரவாதியான சாணக்கியன் எந்த அளவுக்குப் பேரரசன் தன நந்தன் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தார் என்பது அனைத்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரியும். (Chanakya had had “implacable hatred against Dhana Nanda” (Page 232 – ‘Ashoka, the Buddhist emperor of India’ – Vincent Arthur Smith). அந்த வெறுப்பினை அன்று முதல் பல பிராமணர்கள் தொடர்ந்து தனநந்தன் மேல் காட்டிவருகின்றனர். அதன் காரணமாக அன்றைய புலவர் சந்த் என்பார் இந்தத் துணைக்கண்ட அரசர்களைத் தனது படைப்பில் பட்டியலிடும்போது, தனநந்தனையும் அவரது வம்சாவழியினரையும் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியே விட்டார்.  (“Such a hereditary hatred becomes evident from the fact that the poet Chand went to the extent to obliterating the era of Nanda dynasty from even the chronicles. “Their reign was excluded from chronological computation by the poet Chand in the twelfth century, who used A-Nanda form of Vikrama era” (Grierson quoted by Vincent Smith – The Early History of India – Page 41). ‘A-Nanda’ meant ‘without Nanda’. This was one of the numerous instances of manipulation of history by the later-day Aryans. Naturally, Nanda emperors had also reciprocated that enmity. All the emperors of Nanda dynasty “were reputed to be bitter enemies of the Brahmans” (ibid.)” – Refer for more to Chapter 5 and 17 of the book on Chanakya by Vaeyurutholibangan.) இவ்வாறு வரலாற்றையே திரிக்கும் வேலையை அன்று முதல் இன்று வரை பல பிராமணர்கள் செய்து வருகின்றனர். எனவே, தாங்கள் கூறிய கடத்தல் தொழில் நிகழ்வுகள் என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை.

கலீல் ஜிப்ரான்: இவ்வாறு வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதன் காரணம் என்ன?

வின்சென்ட் ஸ்மித்:   பிராமணர்கள் தங்களது வல்லாதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயல்கிறார்கள். தற்போது, அதாவது 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அந்த முயற்சியில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். பண்டைய காலத்தில் முடியாட்சி முறை இருந்த பொழுது மன்னர்களைத் தங்களுடைய விருப்பத்தின் படி தேர்ந்தெடுக்க பிராமணர்களால் முடியவில்லை. எனவே,  யார் மன்னராக வந்தாலும், தங்களுடைய விருப்பத்தின்படி அவர் நடக்கும் அளவுக்கு அவர்களை சுற்றி உள்ள அதிகார மையங்களை கைப்பற்றிக் கொண்டு அந்த அரசர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 1947க்குப் பின்னர் முடியாட்சி முறை இல்லாததால், தங்களுடைய அடிமைகளையே ஆட்சியாளர்களாக ஆக்கி அதன் மூலம் அரசின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, அன்றைய குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1952ம் ஆண்டில் பிராமணர்களுக்குப் பாதபூசை செய்து அந்தத் தண்ணீரைக் குடித்த நிகழ்வைக் கூறலாம். எனவேதான், இந்தியாவைத் தொடர்ந்து உண்மையான மக்களாட்சி முறை உள்ள நாடாக வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. பல அடிப்படை உரிமைகளை 2014 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு மறுக்கிறார்கள். வழக்கம் போல பல சதி வேலைகள் செய்து முதலாளிகளை மிரட்டி, ஊடகங்களில் இருந்து தங்களுடைய வல்லாதிககச் செயல்களை எதிர்க்கும் ஊடகர்களை நீக்குகிறார்கள். சமூக ஊடகங்களில் பொய்ப் பரப்பரை செய்வதற்காக பலருக்குப் பயிற்சி கொடுத்து ஏவி விடுகிறார்கள். இந்தியாவை மக்களின் அரசாக  இல்லாமல, உளவாளிகளால் நடத்தப்படும் அரசாக (Spy State), மக்களை  உளவுகாணும் அரசாக (Surveillance State), மக்களை மதிக்காத காவல்துறை கொண்டு நடத்தப்படும் அரசாக (Police State) மாற்ற முயலுகிறார்கள். சீனாவில் மக்களுக்கெதிரான அரசு எப்படி மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறது என்பதை “Surveillance State: Inside China’s Quest to Launch a New Era of Social Control” என்ற நூலில் Josh Chin மற்றும் Liza Lin ஆகிய இருவரும் தெளிவாக விவரித்திருப்பார்கள். சீனாவில் இல்லாத சதுர்வர்ண அமைப்பு இந்தியாவில் இருப்பதால், இந்தியா சீனாவை விடக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாறும். அதற்கான செயல்பாடுகளைத்தான் இன்றைய இந்திய ஆட்சியாளகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அதற்காகத்தான், உண்மையான வேலைவாய்ப்புக்களை உருவாக்காமல், சதுர்வர்ண அமைப்புக்காக அடிமை வேலை செய்ய முன்வருவதை மட்டுமே இன்றைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பாக இந்தக் காவி ஆட்சியாளர்கள் மாற்றிவருகிறார்கள். இவ்வாறான அடிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கவேண்டுமானால், வரலாற்று உண்மைகளைக் கடத்தலும், திரித்தலும், மறைத்தலும் மிகவும் தேவையென்பது அவர்களுக்குத் தெரியும்.

(வால்டேர் அப்போது குறுக்கிட்டுப் பேசுகிறார்)

வால்டேர்: இப்போது எனக்குப் புரிகிறது. மிகவும் நன்றாகவே புரிகிறது.

திருவள்ளுவர்: என்ன புரிகிறது?

வால்டேர்: இந்தியாவில் இதுவரை இந்தக் காவிக்கூட்டம் செய்துள்ள கொடுமைகளையும் இனிச் செய்யவிருக்கும் மாபாதகங்களையும் ஐக்கிய நாடுகள் அவையோ அல்லது வேற்று நாட்டவரோ தட்டிக்கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, இன்றைய இந்திய அரசு மற்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்காமல் மிகவும் அநாகரிகமாக ஐ.நா.வில் மௌனம் காக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது.  உக்ரைன் நாட்டில் ரஷ்யா செய்த மனித உரிமைக்கெதிரான அட்டூழியங்களைக் கண்டனம் செய்து ஐ.நா. தீர்மானம் கொண்டுவந்தபோது, இந்தியக் காவிஆட்சியாளர்கள், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். (“India abstains from Human Rights Council vote to probe Russian actions” – The Hindu – 04.03.2022,  “India abstains in UNHRC resolution on deteriorating human rights situation in Ukraine due to Russian aggression” – The Hindu – 13.05.2022 & “India abstains as UNHRC votes to extend inquiry against Russia” – Times of India – 05.04.2023). அதுபோலவே, ஈரான் அரசு தனது மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டபோதும் இந்தியா ஒதுங்கி நின்றது. (“India Abstains From UN Vote To Probe Iran’s Alleged Human Rights Violation” – NDTV – 25.11.2022). அதுபோலவே இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைக் கண்டித்த ஐ.நாவின் தீர்மானத்தையும் ஆதரிக்காமல் இந்தியக் காவி ஆட்சியாளர்கள ஒதுங்கி நின்றனர். (UN: India abstains from voting on Sri Lanka human rights resolution” – Times of India – 06.10.2022). இந்த நிலைப்பாடுகள் நேரிய அரசியல் அடிப்படையில் எடுக்கப்பட்டவை அல்ல. சதுர்வர்ண அடக்குமுறை ஆட்சிக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட சற்றும் நேர்மையற்ற நிலைப்பாடு ஆகும்.

திருவள்ளுவர்: இவ்வாறு ஒதுங்கிக்கொண்டால் இந்தியாவில் காவிக்கூட்டம் செய்யும் கொடுமைகளை உலகம் கண்டுகொள்ளாமல் போய்விடுமா?

வால்டேர்: போகாது. ஏனெனில், காவிக்கூட்டம் தனக்கொரு சட்டம் பிறருக்கு வேறொரு சட்டம் என்ற கொள்கை உடையது. கோத்ரா கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை என்று 24.05.2022அன்று சொன்ன காவிக்கூட்டம் 19.11.2022 அன்று வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டது பற்றி அந்நாட்டு அரசிடம் விளக்கம் கேட்டது. எனவே, இந்தியாவை பிராமண வல்லாதிக்கத்தின்கீழ் கொண்டுவர அதே காவிக்கூட்டம் செய்யும் கொடுஞ்செயல்கள் உலக அரங்கில் நிச்சயமாக தீவிரமாக விவாதிக்கப்படும். இவை Internal Mass Atrocity Crime ஆகக் கருதப்படும்.

ஆபிரகாம் லிங்கன்: ஏன் ஒரு நேர்மையான சமூக அமைப்ப இந்தியாவில் உருவாகாமல் இவ்வளவு தூரம் தடுக்கின்றனர் பிராமணர்கள்?

மறைமலை அடிகள்: இதற்கு விடையாக ஒரே ஒரு நிகழ்வைக் கூறினாலே உண்மை உங்களுக்கு எளிதில் விளங்கிவிடும்.  ஒரு முறை, 1937 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் சென்றிருந்தபோது, கோயில்கள் மிகப்பெருமளவில் சொத்துக்களும், நகைகளும், தங்கத்தினாலான சமையற் பாத்திரங்களும் வைத்திருப்பதைக் கண்டார். அக் கோயில்களில், இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பிராமணர்களை ஒரே நேரத்தில் உட்காரவைத்து விருந்து படைக்கக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடங்களைக் கண்டார். (“….vast halls which can seat two or three thousand Brahmins to dinner at a time, and on certain occasions they are thus fed and feasted” (Page -78 – The Epic of Travancore – Mahadev Desai). அங்கு உண்வு உண்ணும் பிராமணர்களுக்குத் தங்கக் கோப்பைகளில் பால் வழங்கப்பட்டது.

ஆனால், அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான விடுதியில், உரிய அளவில் பால் கூடக் கிடைக்கவில்லை. அவர்கள் காந்தியிடம், குஜராத்திலிருந்து இரண்டு மாடுகளை அனுப்புமாறு கோரினர். அப்போது காந்தி அவர்களிடம் இது தொடர்பாக அதிகாரிகளைக்கேட்குமாறும், “பிராமணர்களுக்குத் தங்கக் கோப்பையில் பால் ஊற்றிக் கொடுப்பவர்கள், அரிசன மக்களுக்கு பித்தளைக்குவளையில் மோராவது ஊற்றிக்கொடுக்கமாட்டாரகளா” என்றும் கேட்டார். “You tell the authorities that if they can afford to pour out milk for the Brahmans from those golden pots, would they not pour out a little buttermilk for the Harijan boys from brass pots…” (Ibid.). இந்தக் கொடியதொரு சமூக அமைப்புதான் பிராமணர்களின் ஆளுகையில் கோயில்கள் இருந்தபோது, உருவாக்கப்பட்டிருந்தது.

“ஊட்டுப்புரா” என்றால் என்ன என்று தேடிப்பார்த்தால், கோயில்களின் பூசகர் உரிமையை பிராமணர்கள் வைத்திருந்தபோது, எவ்வாறு,  சமூகத்திற்குப் பயனுள்ள பணி எதையும் தாங்கள் செய்யாமல், மாற்றார் உழைப்பில் கோயில் சொத்தில் உண்டுகளித்திருந்தனர் என்பது தெரியவரும். திருவரங்கம் கோயில் சொத்தும் வருமானமும் கூட இப்படித்தான் அந்தக் கோயிலைச் சுற்றி வாழ்ந்த 40,000 பிராமணர்களை வாழவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த பிராமணர்கள் வேறு உருப்படியான வேலை ஏதும் செய்யாமல் சுகம்தேடும் சோம்பேறி வாழ்க்கை  (voluptuous idleness) யில் காலத்தைக் கழித்து வந்தனர என்பது வரலாற்று உண்மையாகும். (“The wall of the outermost square (of Srirangam temple) is about four mile in circuit. The pagoda owed its celebrity to the supposed possession of the very image of Vishnu which Brahma used to worship; the myriads of pilgrims flocking to it sufficed, at one time, to maintain 40,000 Brahmins in voluptuous idleness”, said Henry Beveridge in his book ‘A Comprehensive History of India – Vol. I’ – Page 579-580, published in 1862. ) அந்தத் திருவரங்கத்துக் கோயில் சொத்துக்கள் என்ன ஆயின என்பது பற்றிய பல விவரங்கள், “கோயில் ஒழுகு” சுவடிகளில் காணக்கிடைக்கின்றன. இந்த நேர்மையற்ற சொகுசு வாழ்க்கையை மீண்டும் பெற அவர்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் இந்திய நாட்டின் அடித்தளத்தையே நேர்மையற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு, ஓரளவு பிராமணரல்லாத மக்களுக்கு சமூக உரிமைகள் உள்ளன என்றால், அதற்கு அடிப்படைக்காரணம் கி. பி.1803ல் நங்கேலி உயிர்நீத்தது முதல் இருநூறு ஆண்டுகளாக நடந்த போராட்டமும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களும்தான் என்ற உண்மையை மக்கள் அறிந்திருக்கவேண்டும். அந்தப் போராட்டங்கள், சதுர்வர்ணம் என்ற கயமைத் தனமான அமைப்புக்கு எதிராகப் பலவடிவில் நடத்தப்பெற்றவை.  இந்த நெடும்போராட்டம், பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாக உள்ள அனைத்துக் கோயில்களிலும், அனைத்துச் சாதியினரும் அனைத்து நிலைகளிலும் பூசகர்களாகப் பணியாற்றும் நிலை வரும்போது நிறைவுக்கு வந்துவிடும். அன்று வரை போராட்டம்தான் பிராமணர்கள் தவிர்த்த பிற மக்கள் அனைவரின் வாழ்வாக இருக்கும்.

லியோ டால்ஸ்டாய்: பிராமணர்கள் ஏன் இந்தியச் சமுதாயத்தை எப்போதும் இவ்வாறு கொதிநிலையிலேயே வைத்துள்ளனர்?

மறைமலை அடிகள்: உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும் என்ற பிராமணீய வல்லாதிக்க மனப்பான்மைதான் இந்தியா காலங்காலமாக முன்னேறாமல் இருந்ததற்குக் காரணம். தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக்கொண்ட பிராமணர்கள், கடவுளையே கடவுளாக இல்லாமல் ஆக்கும் திறனுள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட பிராமணர்கள், கடவுளே தங்கள் தயவில்தான் இருக்கிறார் என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொண்ட பிராமணர்கள், மிகவும் பேராசையோடு உலகே தங்களுக்கானதுதான் என்று எழுதிவைத்துக்கொண்டு மற்றவர்களை அதனை ஏற்குமாறும் வற்புறுத்தினர். மனுவின் சட்டங்களில் சில இந்தச் சூழலில் நாம் தெரிந்து கொள்ளற்பாலது. அவையாவன:

Chapter I.

  1. Whatever exists in the world is, the property of the Brahmana; on account of the excellence of his origin The Brahmana is, indeed, entitled to all.
  2. The Brahmana eats but his own food, wears but his own apparel, bestows but his own in alms; other mortals subsist through the benevolence of the Brahmana.

CHAPTER X.

  1. Let the three twice-born castes (varna), discharging their (prescribed) duties, study (the Veda); but among them the Brahmana (alone) shall teach it, not the other two; that is an established rule.
  2. On account of his pre-eminence, on account of the superiority of his origin, on account of his observance of (particular) restrictive rules, and on account of his particular sanctification the Brahmana is the lord of (all) castes (varna).
  3. Brahmana, the Kshatriya, and the Vaisya castes (varna) are the twice-born ones, but the fourth, the Sudra, has one birth only; there is no fifth (caste).
  4. Dying, without the expectation of a reward, for the sake of Brahmanas and of cows, or in the defence of women and children, secures beatitude to those excluded (from the Aryan community, vahya.)
  5. Let him not, though fallen into the deepest distress, provoke Brahmanas to anger; for they, when angered, could instantly destroy him together with his army and his vehicles.
  6. What man, desirous of life, would injure them to whose support the (three) worlds and the gods ever owe their existence, and whose wealth is the Veda?
  7. Thus, though Brahmanas employ themselves in all (sorts of) mean occupations, they must be honoured in every way; for (each of) them is a very great deity.

இந்த மனு (அ)நீதிக் கால மாயையிலிருந்து மீண்டுவருவதற்கு பிராமணர்களுக்கு இன்று கூட விருப்பம் இல்லை. அந்த அநீதிகள் தொடரவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். அனைத்து அதிகாரமையங்களையும் அதற்காகத்தான் அவர்களே மேலதிகமாகப் பிடித்து வைத்துக்கொள்கின்றனர். அதனால்தான் நேர்மையற்ற ஒரு சமூக அரசியல் அமைப்பை மீண்டும் கொணர பலவிதமான சதிச் செயல்கள் செய்து இந்திய நிலப்பரப்பைப் பாழ்படுத்திக்கொண்டுள்ளனர் இன்றைய காவிக் கொடியோர்கள்.

திருவள்ளுவர்: வரலாறு மிகவும் முக்கியம். வரலாற்றைத் திரிக்க முயலும் காவிக் கொடியோர் கூட்டம் புறக்கணிக்கப்பட்டு அதன் கயமைச் செயல்களை மக்கள் அறிந்து கொள்ள வைக்கவேண்டும். அடுத்த அமர்வில் மீண்டும் அலசுவோம். (திருவள்ளுவர் எழுகிறார். அவை கலைகிறது)

(தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *