வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் உயர்நிலைப் பணிகளின் முக்கியத்துவத்தைக் காலம் கடந்தே உணர்ந்த பிராமணரல்லாத மக்கள் வெள்ளையர் காலத்தில் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், அக்கல்வியின் பயனாக மேல்நிலைக்கு வந்தனர். அந்த பிராமணரல்லாத சிந்தனையாளர்கள்தாம் பிராமணரல்லாத மக்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற ஒன்று சேர்ந்து ஒருமித்த நடவடிக்கை எடுத்து பிராமணர்களின் வன்பிடியிலிருந்து இம்மண்ணின் மைந்தர்களை விடுவிக்கும் முதல் அரசியல் செயல்பாட்டைத் தொடங்கினர் என்ற வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருந்ததன் தொடர்ச்சியாக காந்தியடிகள் பேசத்தொடங்கினார்.)

காந்தியடிகள்: கிருஷ்ணராஜ உடையார் சொன்னது உண்மைதான்.  அதிகார மையங்களில் பிராமணரல்லாதோரின் பங்கு என்பது அலெக்சாண்டர் கார்டூ கொடுத்த அறிக்கையில் பதிவாகியுள்ள 1913 ஆம் ஆண்டில் நிலவிய கொடுமையைவிட 2023ல் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. இதற்குக் காரணமும் அதுவேதான். பிராமணர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம், பிராமணர்களின் விருப்பத்திற்கேற்ப இயற்றப்படும் பாரளுமன்றச சட்டங்கள், பிராமணர்களின் வசதிக்கான நீதிமன்றத் தீர்ப்புக்கள், பிராமணரகளின் ஊடகங்கள், பிராமண அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து நடந்து அவர்களுக்குப் பிடிக்காத ஊடகர்களை வெளியேற்றும் பிராமணரல்லாதோரின் ஊடக நிறுவனங்கள், ஆகியவையே பிராமணரல்லாத மக்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதற்குக் காரணம். இதை பிராமணர்களின் சூத்திர துவேஷம் என்பது சரியே. இந்த சூத்திர துவேஷத்தினால் பிராமணரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்கா. இருப்பினும், அவற்றில் ஓரிரண்டு நிகழ்வுகளை நினைவூட்டவேண்டிய தேவை இருப்பதாக நான் கருதுகிறேன்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஹேப்குட் (Dr. Hapgood) என்பவர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு வெளியே காத்திருந்த இரண்டு நோயாளிகள் இறந்து விடுகின்றனர். இவ்வளவுக்கும் அந்த அறைக்கு வெளியே சில மருத்துவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் செய்யவில்லை. பின்னர் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வந்த ஹேப்குட் இந்த விவரங்கள் தெரிய வந்தவுடன் அந்த மருத்துவர்களைத் திட்டுகிறார். அப்போது அந்த மருத்துவர்கள் ஒருவராக எஸ்.டி. சட்டர்ஜி என்ற பிராமண மருத்துவரும் இருந்தார். அவர் அந்த மருத்துவமனையில் முக்கியமான பொறுப்பில் (Senior House Physician) பணியிலிருந்தவர். அவர் சொன்ன மறுமொழி ஹேப்குட்டை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

தன்னை ஹேப்குட் கண்டித்ததற்கு அவர் சொன்ன  பதிலாவது: “இறந்து போன அந்த இரண்டு நோயாளிகளும் எப்படி இருந்தாலுமே இறந்து போகும் நிலையில் தான் இருந்தார்கள். மேலும் அவர்கள் இருவருமே தாழ்ந்த சாதியில் இருந்து வந்தவர்கள்”. (“It appears that both the deceased were likely to die in any case,” observed Chatterji, M.D., senior house physician, in comment on Hapgood’s upbraiding. “Also, they came of very low caste.”) கடுப்பான டாக்டர் ஹேப்குட், “நீங்கள் கடைசியாகச் சொன்னீர்களே அந்தக் கருத்து எந்த விதத்தில் இந்த நிகழ்வுக்குத் தொடர்பானது?” (“Is that last remark relevant?”) என்று சட்டர்ஜியை உற்றுப் பார்த்துக் கேட்டார். அதில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த சட்டர்ஜி திமிரோடு மறுமொழி சொன்னார், “சாதியை கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது ஒவ்வொன்றுக்குமே தேவைதான். சாதி என்பது ஆன்மீக வாழ்வின் அசைக்க முடியாத மிகப்பெரும் பாறை.  என்றாவது ஒரு நாள் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மேற்கத்திய உலகிற்கு அறிவு வளர்ந்து இருக்கும்.  எங்களுடைய பண்டைய காலக் கிழக்கு உலகம் இன்றைய மேற்கத்திய உலகிற்குக் கற்பிக்க வேண்டியவை நிறையவே உள்ளன.” (“Caste considerations,” rejoined the Brahman, as one mildly shocked, “are always relevant to everything. Caste is our spiritual Gibraltar. Some day the West may grow to understand. Our an- cient East has much to teach the West.” – Pages 142 & 143 – Slaves of the Gods – Katherine Mayo -1929). சூத்திர துவேஷம் எந்த எல்லை வரை சென்றுள்ளது இவ்வரலாற்று நிகழ்வு நன்கு தெளியப்படுத்தும்.

கேதரின் மேயோ இந்த நிகழ்வு போலப் பல்வேறு நிகழ்வுகளை சான்றுகளோடு திரட்டி பிராமணர்களது சூத்திர துவேஷத்தை தனது நூலில் ஆவணப்படுத்தி இருந்தார். அவரது புத்தகம் வெளிவந்ததும் கேத்தரின் மேயோவுக்கு எதிராகப் பலர் கண்டவாறு அவரை திட்டி எழுதிப் பரப்பரை செய்தனர். புத்தகங்களும் எழுதினர். “ஆரிய சமாஜ்” என்று ஆரியர்களுக்காக ஒரு இயக்கத்தையே உருவாக்கிய லாலா லஜபதி ராய் கேத்தரின் மேயோவை மஞ்சள் ஊடகவியலாளர் (“Yellow journalist”) என்று  திட்டிக் கட்டுரைகள் தீட்டினார் ( Page 93 – Unhappy India’ (1928) Chapter IX – Lala Lajpathi Rai). கேத்தரின் மேயோ தனது புத்தகத்தில் இந்தியாவின் நிலை இப்படி இருப்பதால் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டு இருந்தார். அது என்னைக் கோபம் கொள்ள வைத்தது. நானும் கேத்தரின் மையாவுக்கு எதிராகப் பேசினேன். ஆனால் என்னாலோ லாலா லஜபதி ராயாலோ வேறு எவராலுமோ, கேத்தரின் மேயோ தனது நூலில் சொல்லி இருந்த உண்மைகளை மறுக்க முடியவேயில்லை. இன்று காவிக் கொடியோர் கூட்டத்தின் ஆட்சியில், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினரை பிராமணர்கள் இன்றும் வர்ண அடிப்படையில் இகழ்வதைக் காணும்போதும், சிதம்பரக் கோயில் குருக்கள் தர்ஷன் வயதான ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்மணியை அறைந்ததைக் காணும்போதும்,  மத்தியப் பிரதேசத்தில் ராவத் என்ற பழங்குடிச் சிறுவன் மீது  அதே ஊர் பிராமணனான பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்ததைக் காணும்போதும், அது தொடர்பாக பிராமண இயக்கங்கள் செய்து வரும் செயல்களையும் காணும் போது, அன்று கேத்தரின் மேயோ உலகின் முன் வைத்த சான்றுகளுக்கு ஏன் பிராமணர்கள் சான்று பூர்வமாக மறுப்பு சொல்ல முடியவில்லை என்பது எளிதில் விளங்கும்.

அன்று லாலா ரஜபதி ராய் என்ற சதுர்வர்ண அடிப்படைவாதியான (Chaturvarna fundamentalist) பிராமணர், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக மட்டுமே, வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை கோரி மட்டுமே போராடினார். ஆனால், பிராமணரல்லாத மக்களோ, வெள்ளையர் ஆட்சியை மட்டுமின்றி, பிராமணர்கள் வர்ணாசிரம அடிப்படையில் அவர்களை அவமானப்படுத்தி அடிமைகளாக்கி வைத்திருந்த நிலையையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. உண்மையில், பிராமணரல்லாதார் பிராமண வல்லாதிக்கத்தினை எதிர்த்து நடத்தும் போராட்டம்தான் உலகிலேயே மிக நீண்ட காலமாக நடக்கும் உரிமைப் போராட்டமாகும். இவ்வளவு கொடுமையான அடிமை முறை உலக வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. எனக்கு இந்த உண்மைகள் 30.01.1948 அன்றுதான் தெரிய வந்தன. இந்தக் கொடுமைகள் தொடர்கதையாக அமையாமல் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால் நாம் முன்னரே தீர்மானித்தவாறு அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சாதியினருக்கும் அவரவர்கள் விகிதத்திற்கு ஏற்ப முதலில் உயர்நிலை அதிகார மையங்களில் உரிய பங்கைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பிராமண வல்லாதிக்கம் நீங்கி இந்தியா ஒரு நாகரிகச் சமுதாயமாக மாறும்.

திருவள்ளுவர்: இப்போது வரலாற்றறிஞர் தாராசந்த் பேசுவார்.

தாராசந்த்: ஐயனே! பிராமணர்களின் சூத்திர துவேஷமானது, 1680களில், அதாவது சத்ரபதி சிவாஜி காலத்திற்குப் பிறகு இருந்த காலகட்டத்தில், மிகவும் உச்சத்தில் இருந்தது. பேஷ்வாக்களின் கை ஓங்கிய பொழுது மதம் சமூக அமைப்பு மற்றும் நாட்டு நிர்வாகம் ஆகியவற்றில் மிக முக்கியமான பதவிகளை மிகப் பெரும் அளவில் பிராமணர்கள் பிடித்துக் கொண்டனர். உழவர்களும் கலைஞர்களும் இகழப்பட்டனர். குன்பத், எலும்பை மெல்பவர்கள் என்றெல்லாம் பலவிதமாக அவர்கள் எள்ளி நகையாடப்பட்டனர். பிராமணர்கள் அவர்களோடு சேர்ந்து உண்பது கிடையாது. பிராமணர்களுடைய சமுதாய விழாக்களில் உழவர்களையும் கலைஞர்களையும் தாராளமாகக் கலந்துகொள்ள அனுமதிப்பது கிடையாது. சமஸ்கிருத கல்வி என்பது பிராமணர்களுக்கு மட்டுமேயான உடைமையாக இருந்தது.  கல்வியையும் அவ்வாறே அவர்கள் கருதியதால், மராத்தா சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதையே பிராமணர்கள் ஒத்துக் கொள்ளவில்லை (“During the ascendance of Peshwas, the Brahman community had come to occupy the prominent position in religious and social affairs and in the administration of the country. The peasants and the artisans were looked down upon with contempt. ‘Kunbat, plough-drivers, bone-chewers’ were some of the opprobrious epithets used for them. The Brahmins would neither eat nor drink with them nor would they allow them to mix freely in their social functions. Sanskrit learning was the preserve of the Brahmans; they, likewise, disapproved of the Maratha children going to the new schools.”( Page 273 – History of Freedom Movement in India – Vol. 2 – Tarachand – Publications Division – Government of India) (Emphasis supplied). சூத்திர துவேஷம் எந்த அளவுக்கு பிராமணர்களுடைய சிந்தையில் எல்லை கடந்து வேரோடி இருந்தது என்பது இவ்வரலாற்று உண்மைகளிலிருந்து நன்கு தெரியவரும். பிராமணீயக் கொள்கை என்பது மனிதாபிமானம் இல்லாதது; பிராமணர்களின் அரசியல் சமூக வல்லாதிக்கத்திற்காக எந்தவிதப் பஞ்சமா பாதகங்களும் செய்யலாம் என்பதை அனுமதிப்பதுதான் பிராமணீயம்; சற்றும் நேர்மை என்பதே இல்லாததுதான் பிராமணீயம்; சதிச் செயல்களையே தனது செயல்முறையாகக் காலங்காலமாக நடத்திக்கொண்டிருப்பது பிராமணீயம்.

இப்படிப்பட்ட பிராமணீயக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்ட பிராமணர்கள்தாம் இந்திய அரசியல் சட்டத்தின் வரைவுக் குழுவில் இருந்து கொண்டு உண்மையான மக்களாட்சி முறை இந்தியாவில் வரமுடியாதபடி சதிகள் செய்து அரசியல் சட்டத்தை உருவாக்கினர்.  எனவேதான், 1946 ல் இருந்த பேச்சுரிமை, எழுத்துரிமை கூட இன்று மிகக் குறைந்து வருகிறது; மறுக்கப்பட்டு வருகிறது. உரிமை பெற்ற நாட்டில் இவ்வுரிமைகள் மக்களுக்கு அன்று இருந்ததைவிட இன்று அதிகமாகி விரிவடைந்திருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. ஆனால், இந்தியாவில் காவிக்கொடியோர்களின் சதிச் செயலால் அன்று இருந்த உரிமைகள் இன்று பறிக்கப்பட்டு வருகின்றன. வெளியில் பார்ப்பதற்குத்தான் உண்மையான அரசு இயந்திரம் இருக்கின்றதே தவிர, இந்தியாவில் காவிக் கொடியோர் கூட்டத்தின் நிழல் ஆட்சிதான் (Shadow Governmenet) உண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. (1) தேர்தல் பத்திரங்கள் (2) பி.எம். கேர்ஸ் ஆகிய இரண்டுமே இந்தியாவில் நடப்பது நிழல் ஆட்சிதான் என்பதைத் தெள்ளத் தெளிவாக நிறுவும். மேலும் தேர்தலில் தாளைப் (Ballot Paper) பயன்படுத்தாமல் , மிக அதிகம் செலவு செய்து வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் அத்தோடு இணைக்கப்பட்ட VVPAT எனும் பதிவுச் சீட்டை முழுமையாக சரிபார்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதும் அதன் நிலையை நியாயப்படுத்துவதும், இந்தியாவில் மக்களாட்சிமுறை மிகவும் மோசமான நிலையில் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு தெளிவுபடுத்தும்.

மக்களின் பேச்சுரிமை எழுத்துரிமையைப் பறிக்க மேலும் வழிசெய்துள்ள, இந்தியாவின் சட்ட ஆணையத்தின் (Law Commission) 279 ஆவது அறிக்கையை விட மிகக் கேவலமான அறிக்கை இருக்க முடியாது. இங்கிலாந்து மக்கள் அவர்களை அவர்களே ஆண்டுகொண்டிருக்கும் இங்கிலாந்தில் இல்லாத, ஆனால் அவர்கள் மற்றவர்களை ஆள்வதற்காக இந்தியாவில் கொண்டுவந்த சட்டம்தான் தேசத்துரோகம் என்ற இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 A என்ற பிரிவு ஆகும்.

இந்த அநாகரிகமான சட்டத்தை நீக்கக்கூடாது என்று இந்த 279 ஆவது அறிக்கை சொல்லியது. அதற்குக் காரணம் “இந்தியாவின் கள நிலைமை” (India’s ground reality) என்று கூறிய சட்ட ஆணையம், அந்தக் கள நிலைமை என்று விளக்கவில்லை. (மேல் விவரங்களுக்கு: “Law Commission backs sedition law, says ‘India’s ground reality different” – India Today 02.06.2023, “Sedition law report: A regressive step by Law Commission: The commission’s report on the sedition law is neither unbiased nor does it protect human rights” – The Hindu 08.06.2023;  & “Law Commission’s Report on Sedition Ignores Free Speech Law and Indian Colonial History” – Live Law – 10.06.2023). இந்தியாவில் எதிர்காலத்தில் காவிக் கொடியோரின் நிழல் அரசாங்கம் மேலும் தீவிரமாகக் கொடுங்கோலாட்சி செய்ய இந்த அறிக்கை உதவி செய்கிறது.

எனவே, உடனடியாக இந்திய அரசின் சட்டங்கள் மக்களின் உரிமைகளை மதிப்பனவாக மாற்றப்படவேண்டும். இந்தியாவில் மக்களின் அரசு நிலவே வேண்டுமேயல்லாது, காவிக்கொடியோர் கூட்டத்தின் சாணக்கியச் சதிகள் செய்யும் அரசு அல்ல.

இந்தியாவின் தேவை இங்கும் ஒரு மேக்னகார்ட்டா (Magna carta). சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க அறிவூட்டப்படவேண்டும். இல்லையேல், சதுர்வர்ண வெறியர்களான கே.எம். முன்ஷி போன்றோர் சதி செய்து இந்திய அரசியல் சட்டத்தில் நுழைத்து வைத்துள்ள சதுர்வர்ண விதிகள் பேயாட்டம் போட முயலும்.

திருவள்ளுவர்: அந்தக் கே.எம்.முன்ஷி யார்?

தாராசந்த்: அவர் இந்திய அரசியல் சட்டத்தின் வரைவுக் குழுவில் இருந்தவர். மிக மோசமான சதுர்வர்ண வெறியர். சதுர்வர்ண அமைப்பில் அடித்தட்டில் உள்ள மக்களின் துயர் பற்றிக் கவலைப்படாதவர்.

இவர் அந்த நால் வர்ண அமைப்பில் அவரவர் தகுதிக்கேற்ப (“the place his capacity and culture deserved”) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கொஞ்சம் கூட நா கூசாமல் பிராமணரல்லாத மக்களை இழிவு படுத்திப் பல்வேறு மேடைகளில் பேசியவர். மனச்சாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாதவர். இவரும் இவரைப் போன்றோரும் அரசியற் சட்ட வரைவுக்குழுவில் இருந்து கொண்டு பிராமணரல்லாத மக்களுக்கு எதிராகச் செய்த வேலைகள்தாம் இந்தியாவில் இன்று காவிக் கொடியோர் கூட்டத்தின் கொடுங்கோலாட்சி நடக்க வழிசெய்துள்ளது.

இவரது வெறித்தனமான பேச்சுக்கள் அவர் உருவாக்கிய கல்வி நிலையம் வெளியிட்டுள்ள நூலிலேயே கூடப் பதிவாகியுள்ளன. அவையாவன:

“புதுமை மோகத்தில் மூழ்கி இருக்கும் நாம் சாதி அமைப்பை நீர்கூடப் புகாத அளவுக்கு பிரிக்கப்பட்டு இருக்கும் ஒரு ஏற்பாடு என்றும் அதனால் இந்த அமைப்பு கால காலத்திற்கு சம உரிமையை மறுக்கும் அமைப்பு என்றும் நினைக்கிறோம்.  வர்ணாசிரமம் என்பது முழுக்க முழுக்க இந்தக் கருத்துக்கு மாறானது. சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் எந்த வகுப்பில் பிறந்தாரோ அந்த வகுப்பில் ஒரு பாதுகாப்பான இடத்தை அது அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய திறமைக்கும் பண்புக்கும் உரிய இடத்தை தர இந்தச் வர்ணாசிரம அமைப்பு வலியுறுத்துகிறது.” “We, with our modern obsessions, look upon the caste system as a water-tight arrangement, which sanctions enduring inequality. Varnashrama was entirely different. It gave to each one a secure place in the class of his birth, but demanded for every one the right to assume the place his capacity and culture deserved”, said Munshi, in his book, ‘I follow the Mahatma’ (Page 259 -Views and Vistas – Bharathiya Vidhya Bhavan).

மும்பை கீத வித்யாலயாவின் பட்டமளிப்பு விழாவில், 20.07.1950, அவர் பேசியதாவது: “மேல்நாடுகளின் சமூக அமைப்பை பார்த்து வியந்து கருத்துக் குருடர்களாக ஆகிப்போன நாம், உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் காட்டுவாசிகளாக உழன்று கிடந்த பொழுது இந்த நாடு முழுவதுமே மிகச் சிறந்த சமூக ஒருங்கிணைப்போடு வாழ வழி வகுத்த ஒரு அமைப்புதான் சதுர்வர்ண அமைப்பு என்ற உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்”.  “We, who are blinded by an admiration of the social apparatus of the West, fail to realise that Chaturvarna was a marvellous social synthesis on a country-wide scale, when the rest of the world was weltering in a tribal state” (ibid)

அதற்கு முன் 09.12.1943 அன்று கான்பூரில் விக்கிரமாதித்தன் இருநூறாம் ஆண்டு விழாவில் அவர் வர்னாசிரம அமைப்பை வியந்து புகழ்ந்து பேசிய பேச்சு அவர் எந்த அளவுக்கு மனச்சாட்சியோ, மனிதத் தன்மையோ இல்லாதவர் என்பதைக் காட்டியது: “வர்ணாசிரம தர்மம் என்ற வியக்கத்தக்க சமூக ஒருங்கிணைப்புக் கொள்கை, தர்மத்தையும் சமூக அமைப்பையும் தாங்கி நிற்கும் இரும்பு வடமாக இருந்து வந்திருக்கிறது அதனால் சமூக குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் சுதந்திரத்தை அளித்துள்ளது. இந்த சமூக அமைப்பு வகுப்பு வாதப் போர்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. பல சமூகக் குழுக்கள் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவு சார்ந்து இருக்கும் நிலையால் உருவானது ஆகும். இதில் உள்ள படிநிலை அமைப்பு என்பது,  ஒவ்வொரு சமூகக் குழுவின் பண்பாட்டு அளவை பொறுத்து. அமைந்ததாகும்” “The wonderful social synthesis – Varnashrama-dharma – provided an independence of social groups, the steel-frame which buttressed the social order and Dharma itself” ( Page 258 – ibid). He had also said, “The social order is not based on class war, but an inalienable interdependence of of social groups; on a hierarchy arranged according to the degree of culture attained by each” (09.12.1943 -ibid).

இப்படிப்பட்ட சூத்திர துவேஷம் கொண்ட பிராமணர்களின் கூட்டம்தான் இந்திய அரசியல்சட்டத்தினை உருவாக்கும் குழுவில் மிகப்பெரும்பான்மை இடத்தை (4/6) ஆக்கிரமித்துக் கொண்டது.. அதே வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் சதுர்வர்ண அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தவர். “இந்து சமூக அமைப்பு என்பது  ஏதோ தவறிப் போய்  மக்களாட்சி முறைக்கு எதிரானதாக  அமைந்துவிடவில்லை. அது மக்களாட்சி முறைக்கு  எதிரானதாக இருக்க வேண்டும் என்று  திட்டமிடப்பட்டு  உருவாக்கப்பட்டது  ஆகும்.  அதில் உள்ள  வர்ணபாகுபாடும்  சாதிப்பாகுபாடும்   சாதியே அல்லாதவராகப்  பிரித்து வைப்பதும்   இந்து மதத்தின்  கொள்கைகள் அல்ல: அவை  இந்துமதம்  விதித்திருக்கும்  கட்டுப்பாடான கட்டளைகள் ஆகும்.   உண்மையான மக்களாட்சி முறை வந்துவிடாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தடையரண்கள்தாம் இப்பாகுபாடுகள்” என்று கூறி வர்ணாசிரம அமைப்பின் கயமைத்தன்மையை மக்களிடம் எடுத்துரைத்தவர் அம்பேத்கர். “The Hindu social system is undemocratic not by accident. It is designed to be undemocratic. Its division of society into varnas and castes, and of castes and outcastes are not theories but are decrees. They are all barricades raised against democracy.” (Page 284 Dr. Babasaheb Ambedkar Writings and Speechers Vol.4 Vasant Moon). இருந்தும் கூட இந்தச் சதுர்வர்ண வெறியர் கூட்டம் வரைவுக்குழுவில் தனக்கிருந்த 4/6 பெரும்பான்மை மூலமாக பலவிதமான சதிச்செயல்களைச் செய்து, அம்பேத்காரைச் செயல்பட விடாமல் தடுத்து, இந்தியாவில் காவிக்கூட்டத்தின் கொடுங்கோலாட்சிக்கு வழி வகித்து வைத்தது. இவ்வுண்மைகள் இந்திய மக்களுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

(வரலாற்றறிஞர் தாராசந்த் இவ்வாறு அன்றைய நிகழ்வுகளை விவரித்துக்கொண்டிருந்தபோது, காமராஜர் ஆட்சியில் கல்வித்துறை இயக்குநராகப் பதவி வகித்த நெ.து. சுந்தரவடிவேலு மென்மையாக வருத்தம் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்தார். இது கண்ட திருவள்ளுவர் அவரைப் பேசுமாறு பணித்தார்.)

சுந்தரவடிவேலு: ஐயனே! இப்படிப்பட்ட சூத்திர துவேஷம் கொண்ட முன்ஷி உருவாக்கிய  பாரதிய வித்யா பவன் என்ற கல்வி நிறுவனத்திற்குத்தான் மைக்ரோசாப்ட்  நிறுவனரான பில் கேட்ஸ் திரும்பத் திரும்ப  கோடிக்கணக்கான ரூபாய்களை 1997 முதல் தொடர்ந்து நன்கொடையாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது கண்களுக்கு  இந்தியாவில்  இருக்கும் எந்தக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனமும் தெரியவில்லை; தெரியாமல் போனது. இதிலிருந்தே இந்தியாவில் உள்ள பிராமணர்கள் உலகம் தழுவிய அளவில்  தங்களுடைய இரகசியச் செயல்பாட்டு அமைப்பை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

மறைமலையடிகள்: ஆம். இந்தியாவில்  பிராமணர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு  தாங்கள் பிராமணர்கள் என்ற இறுமாப்பு இருக்கும் வரை இந்தியாவில் அனைவருக்கும் அனைத்துத் துறைகளிலும் சம உரிமை என்ற  சமூக அமைப்பு மலராது; அவ்வாறு மலர பிராமணர்கள் விடமாட்டார்கள். எனவே இந்தியாவில் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதாருக்குமான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். மேலும் காவி கொடியவர்களின் ஆட்சி நடைபெறும் இக்காலத்தில் பிராமணர்களின் அடக்குமுறை  அதிகமாகிக்கொண்டுதான் போகிறது. கடந்த 29.07.2023 அன்று எர்ணாகுளத்தில் உள்ள ஜிஞ்சர் என்ற நட்சத்திர ஓட்டலில் பிராமணர்களின் அமைப்பு ஒன்று ஒரு கூட்டம் நடத்தியது. அதற்குப் பெயர் BBB என்பதாகும். அதாவது Business By Brahmins. இம்மாதிரியான அமைப்பை குஜராத்தி ஜைனர்கள்தாம் இதுவரை வைத்திருந்தனர். அதற்குப் பெயர் JITO ஆகும். (Jains International Trande Organisation).   பிராமணர்கள் எப்படி வணிகத்தில் தழைக்கவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குள் திட்டமிட்டுச் செயல்படுவதற்காக இந்த அமைப்பு அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இனி பிறப்பில் பிராமணர்களைவிட ‘இழிவானவர்கள்’ என்ன மாதிரி வணிகம் செய்வார்கள் என்பது ஆராயவேண்டியதாகும். ஏனெனில், இந்த பிபிபி அமைப்பினர் தமது அடையாளமாக ‘உலகின் முதன்முதல் அரசியல் பயங்கரவாதியுமான சாணக்கியனை வைத்துள்ளனர் (The first political terrorist of the world). இந்த BBB அமைப்பு இந்துக்களுக்கான அமைப்பு அல்ல; இந்துக்களில் பிறவியின் அடிப்படையில் `உயர்ந்தவர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களுக்கான அமைப்பு. அர்த்த சாஸ்திரம் என்ற பயங்கரவாத நூலை (Terrorist Toolkit) பிராமணர்களுக்காக உருவாக்கிக் கொடுத்தவன் சாணக்கியன். சதுர்வர்ண அமைப்பைப் பாதுகாக்க, பஞ்சமா பாதகங்களையும் விஞ்சி பல பயங்கரவாதச் செயல்கள் செய்வது சரிதான் என்று தனது சீடர்களுக்கு அறிவுறுத்திச் சென்றவன் சாணக்கியன்.

திருவள்ளுவர்: பிராமணரல்லாதவர்கள் அனைவரும் கவலைப்படவேண்டிய தேவை இருக்கிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி ஆராய வேண்டும். கிமு 300 களில்,  இந்தத் துணைக்கண்டத்தை கற்காலத்தை விட  மோசமான காலத்திற்கு  அழைத்துச் சென்ற  சாணக்கியன் என்ற ஒரு கொடியவனை,  காதம்பரி என்ற நூலில்  பாணபட்டராலேயே  கண்டனம் செய்யப்பட்ட,  மிகவும் இகழப்பட்ட  ஒரு கயவனை,  ஒரு பயங்கரவாதியை, `The Greatest Genius of Modern Time’ என்று மனச்சாட்சியே இல்லாமல் புகழும் இந்த அமைப்பு  நாட்டை நிச்சயமாக  நாகரிகச் சமுதாயமாக   ஆக்குவதற்கு  விடாது. இருந்தும், மணிப்பூர் இனக்கொலை நிகழ்வுகள் முதலாக, இந்தக் காவிக் கொடியோர் கூட்டத்தின் சதிச் செயல்கள் உலகினருக்கு நன்றாகவே தெரிந்துள்ளன. இங்கிலாந்தின் செய்தியிதழான British Herald தனது ஜூலை 2023 ஆசிரியவுரையில் மோடியையும் அவரின் பின் இருந்துகொண்டு காவிக்கூட்டம் செய்யும் கயமைச் செயல்களையும் பற்றித் தெளிவாகவே எழுதியுள்ளது. “Democracy in Distress: Tightening Restrictions and Minority Attacks Raise Alarms in India” என்ற தலைப்பில் வந்துள்ள இந்த ஆசிரிய உரை பற்றித் தனியாக அலசுவோம். (தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *