(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில பிராமணரல்லாத மக்களைப் பயன்படுத்தி, பிராமண வல்லாதிக்கத்திற்கு வழிசெய்யும் கருவியாக அப்போராட்டத்தை மாற்றிக் கொண்ட பிராமணத் தலைவர்கள் எந்த அளவுக்குக் காலந்தோறும் சூத்திர துவேஷம் கொண்டு செயல்பட்டார்கள் என்பதையும் இந்திய அரசியல் சட்டத்தை வரையும் குழுவில் எப்படிப்பட்ட சதுர்வர்ண வெறியர்கள் இருந்தார்கள் என்பதையும், கலந்தாய்வுக் கூட்டம் கடந்த அமர்வுகளில் ஆய்வு செய்தது. அதன் தொடர் நிகழ்வாக இந்த அமர்விலும் தனது கவலைகளைப் பதிவு செய்யலானது.).
திருவள்ளுவர்: அன்பர்களே! இந்தியாவில் பிராமணரல்லாத மக்களுக்கும் பிராமணர்களுக்குமான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிராமணர்கள் தங்கள் வல்லாதிக்கத்தை நிறுவ பலவிதமான சதிவேலைகளில் வழக்கம்போல ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளையர் ஆட்சிக்காலத்திற்கு முற்பட்ட காலத்தில் அவர்களது சதிச்செயல்கள் வெற்றி பெற்றதுபோல தற்போது வெற்றிபெற முடியவில்லையே என்ற ஏக்கம் பிராமணர்களுக்கு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, அவர்கள் செயல்பாடுகளில அச்சமும், நிதானம் தவறலும் அண்மைக்காலமாக மிக அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் காவிக் கொடியோர் கூட்டம் தற்போது உலவவிட்டுக்கொண்டிருக்கும் சனாதன தர்மம் என்ற சொற்களைக் கூறலாம். சனாதன தர்மம் என்றால் என்ன என்று எந்த பழைய நூலிலும் விளக்கப்படாத நிலையில், அனை பிராமணர்களுக்குச் சாதகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தி, இதுதான் சனாதனம், இதுதான் சனாதனம் என்று பரப்புரை செய்யும் நகைச்சுவைக் காட்சிகளை நாம் அதிகம் காணமுடிகிறது. இன்று இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒரு நேரலையை நாம் காணவிருக்கிறோம். (திருவள்ளுவர் சைகை செய்ய, அங்கிருந்த பெருந்திரையில் காட்சிகள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு கடற்கரையில் அம்மாஞ்சியும் அத்திம்பேரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)
அம்மாஞ்சி: அத்திம்பேர்! பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் சும்மாத்தான் பேசுகிறது என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாளன்று தொடங்கிவைத்தது அன்றைக்கு அம்மாவாசை என்பதால்தான் என்றும், இதிலிருந்தே சனாதன தர்மம் தொடர்பான அந்தக் கட்சியின் நிலை ஆழமற்றது என்று தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாரே! 26.09.2023 அன்று இந்து நாளிதழில் இது பற்றிச் செய்இ வந்துள்ளதே! பார்த்தேளா?
அத்திம்பேர்: பார்த்தேன், அம்மாஞ்சி! செப்டம்பர் 15 அன்று இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தத் திட்டத்தைத் தொடங்கியதன் காரணம், அந்த நாள் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் என்பதால்தான். இருந்தும் இந்தத் அண்ணாமலை, வழக்கம்போல தற்குறித் தனமாக அன்றைக்கு அம்மாவாசை என்பதால், அதாவது அது நல்ல நாள் என்பதால், தி.மு.க. அந்தத் திட்டத்தைத் தொடங்கியது என்று உளறி வைத்திருக்கிறார். அத்தோடு நிற்கவில்லை. அதை தி.மு.க.வின் சனாதன தர்ம எதிர்ப்போடு முடிச்சு போட்டுப் பேசி தனது அறிவின்மையை நிரூபித்திருக்கிறார். வேடிக்கைதான்.
அம்மாஞ்சி: வேடிக்கை என்றால்?
அத்திம்பேர்: வேடிக்கைதான். இன்று வரை சனாதன தர்மம் என்றால் அது மதிப்பிற்குரிய ஒரு கொள்கை என்று நிறுவும் வகையில் எவருமே இலக்கியச் சான்று மூலமாக விளக்கவில்லை. பிராமணர்களுக்கு எதிரானதாக இருக்காது என்றால் எதைவேண்டுமானாலும் சனாதன தர்மம் என்று சொல்ல ஒரு கூட்டம் வேறு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையே, இந்த அண்ணாமலையின் உளறல்கள் வேறு. அம்மாவாசை ஒரு நல்ல நாள் என்று கணித்தே தி.மு.க. தனது திட்டத்தை அறிவித்தது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி சனாதன தர்மத்தின் படியான செயலாகும்? சனாதன தர்மம் என்றால், நல்ல நாள் பார்த்துச் செயலாற்றுவது என்று எங்கே எழுதியுள்ளது? அதைவிட வேடிக்கை. தமிழ்நாட்டில் அம்மாவாசை நல்ல நாள் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், மகாராட்டிராவில் அம்மாவாசை மிக மோசமான நாளாகக் கருதப்படுகிறதே. அதற்கு, அண்ணாமலை என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டிலும் மகாராட்டிரத்திலும் வெவ்வேறு சனாதன தர்மம் கடைபிடிக்கப்படுகிறதா? இவருடைய முட்டாள்தனத்திற்கு எல்லையே கிடையாதா?
அம்மாஞ்சி: உண்மைதான், அண்ணாமலை வேடிக்கைதான் காட்டுகிறார், அத்திம்பேர்! ஆனால், தமிழ்நாட்டில் அம்மாவாசைக்கு மறுநாளான பாட்டிமுகத்தை நல்ல செயல்கள் செய்யத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால்மகாராட்டிராவில் பிரதமை மிக நல்ல நாளாகக் கருதப்படுகிறது. எனவே, அண்ணாமலை சனாதன தர்மத்திற்கும் அம்மாவாசைக்கும் முடிச்சுப் போட்டது தற்குறித்தனமேதான். எனக்கு இது அவருடைய கோமாளித்தனமாகவும் தெரிகிறது, அத்திம்பேர்! இந்த நேரத்தில், 27.09.2023 அன்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவி “சனாதன தர்மத்தை ஒழிக்க முயல்பவர்கள் பாரதத்தை உடைக்க நினைக்கிறார்கள். அவர்களின் தீய செயல்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்று ட்விட்டரில் RAJ BHAVAN, TAMIL NADU என்ற பெயரில் பதிவு செய்திருக்கிறாரே? எந்த சனாதன தர்மத்தை யார் ஒழிக்க நினைக்கிறார்கள்?
அத்திம்பேர்: இவரும் சனாதனம் என்றால் என்ன என்பது பற்றி இதுவரை விளக்கம் தரவில்லை. தமிழ்நாட்டில் பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பற்ற பேச்சு பேசும் செயலை தனது வழக்கமாகக் கொண்டவர். தமிழர் வரலாறும் தெரியாமல், சனாதனம் பற்றிய உண்மையும் அறியாமல், அண்ணாமலையைப் போலவே, உளறித்திரியும் கூட்டத்தில் இவரும் ஒரு ஆள். ஒரே வேறுபாடு, அண்ணாமலை பல்லக்குத் தூக்குபவர்; அதாவது சதுர்வர்ண அமைப்பில் ஒரு அடிமை. இவர் சதுர்வர்ண அமைப்பின் பயனாளி. உண்மை வரலாறு அறிந்தவர்கள், சனாதன தர்மம் ஒழிக்கப்படவேண்டும் என்றுதான் பேசுவார்கள்; அதற்காக உழைப்பார்கள். இந்திய அரசியற்சட்டத்தின் 14 வது மற்றும் 17 வது பிரிவின்படி சதுர்வர்ண அமைப்பு என்பது ஒரு பெருங் குற்றமாகும். பிரிவு 26ஐக் காட்டி மதம் தொடர்பான விவகாரம்தான் சதுர்வர்ண அமைப்பு என்று வாதம் செய்ய முயல்வது சட்டப்படியும் நியாயப்படியும் ஏற்க முடியாத வாதமாகும். இந்தத் துணைக்கண்ட வரலாற்றை நோக்கினால். மதம் என்பது கடவுளையும் கடவுளை மக்கள் அடையும் வழியையும் சொல்லித்தரும் அமைப்பாக மட்டும் இல்லாமல், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்து, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கற்பிதம் செய்து, ஒரே குற்றத்திற்கு உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட பிராமணர்களுக்குக் குறைவான தண்டனையும் தாழ்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட மற்றொருக்கு அதிக தண்டனையும் வழங்கும் விதத்தில் சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்தி வந்த அமைப்பாகும். சுருங்கச் சொல்லின், மதம் என்ற பெயரில் பிராமணர்கள் பிறரை ஏமாற்றி, கல்வி மறுத்து, அடிமைகளாக மாற்றித் தங்கள் சொகுசு வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ள உருவாக்கப் பட்ட அமைப்புதான் இந்து மதம் ஆகும். இதனை நியாயப் படுத்த முனைவோர்தாம் ‘சனாதன தர்மம்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுநர் இரவி இந்தச் சனாதன தர்மம் என்ற சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தி சமூக அமைதியைக் கெடுக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அம்மாஞ்சி: அப்படியா? இரவி தொடர்ந்து அவ்வாறு பேசி வருகிறாரா?
அத்திம்பேர்: ஆமாம். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வானகரத்தில் நடைபெற்ற ஹரிஹராசனம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் இரவி “இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் இருக்கிறது. சனாதான தர்மம் இதைத்தான் சொல்லுகிறது” என்று கூறினார். (“The Harivarasanam Centenary National Committee Festival organized by the Sabarimala Ayyappa Seva Samaj was held at a private hall in Vanakaram, Chennai. Governor of Tamil Nadu RN Ravi addressed the function. He said, “India’s pride is unity in diversity. This is what Sanatana Dharma says” – https://time.news/governor-ravi-who-spoke-like-that-want-to-waste-time-minister-who-made-a-simple-nose-cut-minister-ma-subramanian-on-opinion-of-tn-governor-rn-ravi-regarding-sanatan-dharma/) வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கொள்கையாகும் என்று சொன்னதற்கு, அது இல்லை என்று அவர் மறுத்தார் இந்திய அரசியல் சட்டம் இந்தியாவின் ஆன்மாவை உள்ளடக்கியாதாக இல்லை என்று கூறினார். மேலும், இந்த நாட்டை ஆள்வதற்காகத் தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது என்றும, பாரதம் அரசியல் சட்டம் எழுதுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்றும், இந்த உலகில் உள்ள மாந்த இனத்திற்காக சனாதன தர்மம் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். (“Questioning the notion that unity in diversity is a constitutional construct, he said, “It is not. Constitution doesn’t carry the soul of India. Constitution is for the governance of India. Bharat was born thousands… of years before Constitution was written…Sanatana Dharma has to prevail for the sake of the world, humanity” – The Hindu – 29.06.2022). அவர் மேலும் பேசுகையில், “கஜினி பலமுறை இந்தியாவில் நுழைந்து சோமநாத் கோயிலை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை உருவாக்கினார், ஆனால், அவை அமெரிக்க இராணுவத்தால் அழிக்கப்பட்டன. இதிலிருந்து சனாதன தர்மத்தின் வலிமை தெரிகிறது” என்று குறிப்பிட்டார். “Ghajini, who repeatedly invaded India, destroyed the temple property of Mohammad Somnath and created the cities of Kandahar and Peshawar. Those cities were destroyed by the US military. From this we can know the strength of Sanatana Dharma” (Op. Cit.). அவர் மேலும் பேசுகையில், “பாரதம் துறவிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. அவர்கள் உண்மை என்ன என்று உணர்த்தியும் விளக்கியும் வேதங்களில் சொல்லியுள்ளார்கள். அவை சனாதன தர்மம் என்று ஆயின. அந்த சனாதன தர்மம் தான் இந்த பாரதத்தைக் கட்டமைத்தது” என்று கூறினார். (“Bharat, was created by our rishis and sages who expounded and expanded the truth in our vedas, which became our Sanatana Dharma. It is this Sanatana Dharma which built this Bharat.” – The Hindu -29.06.2022). ஆக வேதங்கள்தாம் சனாதன தர்மமாக ஆயின என்று ஆளுநர் இரவி குறிப்பிடுகிறார்.
அம்மாஞ்சி: ஓ! வேதங்கள்தாம் சனாதன தர்மமா?
அத்திம்பேர்: (சிரிக்கிறார்) நாள், கிழமை பார்த்து ஒரு திட்டத்தைத் தொடங்குவது என்பது அண்ணாமலை ஐ.பி.எஸ். தரும் வியாக்கியானம். வேதங்கள்தாம் சனாதன தர்மம் என்பது இரவி ஐ.பி.எஸ். தரும் வியாக்கியானம். அது மட்டுமல்ல. இதே இரவி, கடந்த ஜூலை மாதத்தில் சனாதன தர்மம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் யாரையும் வெளியே தள்ளாதது என்றும் வெளிநாட்டவர் நுழைந்தபோதுதான் இதில் திரித்தல் வேலைகள் நடந்தன என்றும் கூறினார். அத்துடன் நில்லாது இந்த நாடே சனாதன நாடு என்றும் ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் போன்ற முனிவர்கள் நாம் ஒரே குடும்பத்தின் பகுதி என்றும் அனைவரும் சமம் என்றும் சொன்னதாகவும் ஒரே போடாகப் போடுகிறார்.(The New Indian Express dated 02.07.2023 reports, thus: “Ravi said, “Sanatana Dharma is so inclusive that it does not leave anyone. Distortions came up during foreign invasions and a large section of people tend to forget our origin”. “This is a ‘Sanatan Rashtra.’ Great sages like Adi Sankara, Ramanuja and Madhva conveyed that we are part of a family and we are all equal.”) இரவியின் பிதற்றல்களைக் கேட்பவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள், செய்கிறார்கள்.
அம்மாஞ்சி: நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் பகுதி என்றும் அனைவரும் சமம் என்றும் சொல்வது நல்லதுதானே, அத்திம்பேர்!
அத்திம்பேர்: அதெல்லாம் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக, நமது ஆட்கள் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கோஷமாகும். உண்மையில் எந்தக காலத்திலும் பிராமணரல்லாத மக்களை பிராமணர்களுக்கு சமமாக நாம் நடத்தியது கிடையாது. ரிக் வேத காலத்திலும் சரி, கிமு 300 வாக்கில் எழுதப்பட்ட சாணக்கியனுடைய அர்த்தசாஸ்திரத்திலும் சரி, கிமு 100 வாக்கில் மறு வரைவு செய்யப்பட்ட மனுநீதியிலும் சரி, கோபுரதரிசனம் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதித்த காலத்திலும் சரி, காசி விசுவநாதர் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுவற்றில் ஓட்டையிட்டு அதன் மூலம் தரிசனம் அனுமதித்த காலத்திலும் சரி (Swami Hariharanand Saraswati and Others Vs. The Jailor I/C Dist. Jail, Banaras – (1954) 03 AHC CK 0022 – Allahabad High Court), தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காஞ்சி சங்கராச்சாரி பொன்னாடையை விட்டெறிந்த இன்றைய காலகட்டத்திலும சரி, எந்தக் காலத்திலும் பிராமணரல்லாதார் அனைவரையும், நம்மை விடத் தாழ்ந்த சமூக நிலையிலேயே நாம் வைத்திருக்கிறோம். அவர்கள் நம்மை விடப் பிறப்பின் அடிப்படையில் தாழ்ந்தவர்கள்தாம் என்று திரும்பத் திரும்ப சொல்லி அவமானப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமது காஞ்சி சங்கராச்சாரியாரின் செயல்பாடுகளிலருந்தே இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியவரும். இருந்தும் கூட, இந்து மதம் என்பது வசுதைவ குடும்பகம் என்றும் அனைவரும் சமம் என்றும் தொடர்ந்து பொய் பேசிவரும் கூட்டத்தில் ஆளுநர் இரவி தேவையில்லாமல் போய் மாட்டிக்கொள்கிறார். மதம் சம்பந்தப்பட்ட விவரங்களில் வட இந்தியர்களை ஏமாற்றுவது போலத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பது அவருக்கு தெரியவில்லை. பிராமண வல்லாதிக்கம் வளர மறைமுகமாக சதிகள் செய்வதுதான் எளிது. இரவியைப் போல பேசி மாட்டிக்கொள்ளக்கூடாது.
அம்மாஞ்சி: ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோர் என்னமோ செய்ததாக ஆளுநர் ரவி சொல்கிறாரே?
அத்திம்பேர்: இதுதான் ஏமாற்று வேலை என்பது. சதுர்வர்ண அமைப்பு என்ற ஒன்றுதான் இன்று இந்து ஒற்றுமை என்பது பொய் என்று இன்று வரை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. அந்தச் சதுர்வர்ண அமைப்பை மத்வர் (கி.பி. 1199 – 1238) ஒன்றும் அசைக்கவில்லை. இராமானுஜர் (கி.பி 1017 – 1137) அதைப்பற்றி ஓரளவு பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் காலத்திற்குப் பிறகு 800 ஆண்டுகள் கழித்தும் கோயில் நுழைவுப் போராட்டம் வைக்கத்தில் நடத்தவேண்டியதாகியது. ஆதி சங்கரரைப் (கி.பி. 788 – 820) பற்றிக் கேட்கவே வேண்டாம். சூத்திர துவேஷத்தின் மொத்த உருவமும் அவர்தான். இறைவனை முழுமையாகப் புரிந்து கொள்வதுதான் மனிதனின் மிக உயரிய நோக்கமாக இருக்கவேண்டும் என்று கூறும் ஆதிசங்கரர், இறைவனை அறியும் அறிவு பிராமணரல்லாதோருக்குக் கிடையாது என்று கூறுகிறார் “the non-Brahmin castes will not attain to a supreme knowledge of Brahman”. இதனை விவேகானந்தர் எடுத்துக் காட்டி புத்தரைப்போன்ற பரந்த மனப்பான்மையும் மனித நேயமும ஆதிசங்கரருக்குக் கிடையாது என்றும், தென்னிந்திய பிராமணர்களைப் போலத் தலைக் கருவம் பிடித்தவர் ஆதிசங்கரர் என்றும் சாடுகிறார். (“Shankara’s intellect was sharp like a razor. He was a good arguer and a scholar, no doubt of that, but he had no great liberality; his heart too seems to have been like that. Besides, he used to take great pride in his Brahmanism – much like a southern Brahmin of the priest class, you may say. How he has defended in his commentary on the Vedanta Sutras* that the non-Brahmin castes will not attain to a supreme knowledge of Brahman! But look at Buddha’s heart! – Ever ready to give his own life to save the life of even a kid – what to speak of bahujanahitaya bahujanasukhaya * – For the welfare of the many, for the happiness of the many”! See what a large-heartedness — what a compassion! (CW, VII. 117-18). ஆதிசங்கரர் தூண்டிவிட்ட இனக்கலவரத்தின் மூலமாகத்தான் புத்தமதமும் சமண மதமும் இங்கிருந்து விரட்டப்பட்டன. அந்த மதங்களிலிருந்த பிராமணரல்லாத மக்கள் மறுபடியும் பிராமணர் கட்டுப்பாட்டில் உள்ள சமயத்திற்குள் கொண்டுவரப்பட்டு சூத்திரர்களாக மாற்றப்பட்டனர். இந்த உண்மைகளெல்லாம் மக்கள் அறிவர் என்பது அறியாமல் இரவி உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிறார். இன்றும் கூட பிராமணர்களுக்கு உணவு அளித்தால், காலஞ்சென்ற முன்னோர் மகிழ்ச்சி அடைவர் என்றும், அதற்காகப் பூசை செய்யவேண்டும் என்றும், அதற்காகப் பணம் அனுப்புங்கள் என்றும் கூறி எத்தனை விளம்பரங்கள் முகநூலிலேயே வருகின்றன தெரியுமா? அவை ஏன் பிராமண போஜனம் பற்றிப்பேசுகின்றன? ஏன் சூத்திர போஜனம் பற்றிப் பேசுவதில்லை? சூத்திர் துவேஷம்தானே? சனாதன தர்மம், அனைவரும் சமம் என்றெல்லாம் ஆளுநர் இரவி கதைவிடுகிறார் என்பதைத் தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளமாட்டார்களா?
அம்மாஞ்சி: அத்திம்பேர்! அது எப்படி, ஆளுநர் இரவி தனது சொந்தக் கருத்துக்களையெல்லாம் அதிகாரபூர்வமான ராஜ்பவன் வலைத்தளத்தில் இவர் போடுகிறார்?
அத்திம்பேர்: (சிரிக்கிறார்). அர்த்தசாஸ்திரம் படித்துப் பார்! சதுர்வர்ண அமைப்பைப் பாதுகாப்பதற்காக எண்ணற்ற விதத்தில் சதிவேலைகள் செய்து அதனை எதிர்ப்போரைக் கொலை செய்ய பல விதமான வழிகள் சொல்லித் தந்தவன்தான் உலகத்தின் முதல் அரசியல் பயங்கரவாதியான சாணக்கியன். எந்தக் கொடுஞ்செயல் வேண்டுமானாலும் சதியாகச் செய்யலாம் என்று விலாவாரியாக விவரித்திருக்கிறான். இப்போது டெல்லியில் உள்ள அரசு, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை முதலியவற்றை எப்படி அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும் தனது வழிக்குக் கொண்டுவரவும் பயன்படுத்தி வருகிறது என்று ஆராய்ந்தால் அது அன்றைய சாணக்கியன் கொடுத்திருக்கும் பயிற்சிதான் என்று தெரியவரும். அப்படிப்பட்ட கூடாரத்திலிருந்து வந்திருக்கும் ஆளுநர் இரவிக்கு, அலுவலக வலைத்தளத்தைத் தான் தவறாகப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் எந்தவித மன உறுத்தலும் இருக்காது. சதுர்வர்ண அமைப்பு என்பது ஒரு பயங்கரவாதக் கொள்கைதான் என்பது சாணக்கியனின் அர்த்த சாஸ்திர்ம் காட்டும் உண்மையாகும். இருந்தும், டெல்லியில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் அந்த பயங்கரவாதி சாணக்கியனின் படத்தை முகாமைப் படுத்தி வைத்திருப்பதிலிருந்தே, இன்று டெல்லியில் நடப்பது ஒரு அரச பயங்கரவாத ஆட்சி என்பது தெரியவரும். (“The building has three ceremonial foyers — they display huge brass images of Mahatma Gandhi, Chanakya, Gargi, Sardar Vallabhbhai Patel, B R Ambedkar, and the Chariot Wheel from the Sun Temple at Konark.” – Economic Times – 31.05.2023).
அம்மாஞ்சி: சதுர்வர்ணம் என்ற முறையே தவறுதானே அத்திம்பேர்?
அத்திம்பேர்: தவறுதான். ஆனால், நமக்கு வசதியாக இருக்கிறதே! அதனால்தான், இந்தச் சதுர்வர்ண அமைப்பை நியாயப்படுத்தி, அதைச் சனாதன தர்மம் என்று காட்டி, பிராமணரல்லாத மக்களை ஏமாற்றி, இந்த வர்ணப்பிரிவினையை அம்மக்கள் மரியாதை செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நாக்பூர் அமைப்பு எதிர்பார்க்கிறது. அதன் விளைவுதான் இப்போது தலைமை அமைச்சர் முதல் ஆளுநர் வரை பலர் சனாதன தர்மம் பற்றிப் பேச முனைந்திருப்பதற்குக் காரணம். வா! வீட்டிற்குப் போகலாம்!
(அம்மாஞ்சியும் அத்திம்பேரும் எழுந்து நடந்து செல்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஒரு எருது நின்றுகொண்டு ஆங்காங்கிருந்த புற்களை மேய எத்தனிக்கிறது. அதன் முதுகில் ஒரு காயம் தெரிகிறது. ஒரு காகம் அந்த எருதின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு, அந்தக் காயத்தை மேலும் கொத்திக் கொத்தி எருதின் சதையைத் தின்ன முயல்கிறது. வலிகாரணமாக எருது தன் வாலால் அந்தக் காக்கையைத் திரும்பத் திரும்ப விரட்டி விரட்டிப் பார்க்கிறது. இருப்பினும், எருதின் மீதே ஏறி உட்கார்ந்துகொண்டு, அந்த எருதின் குருதியையும் சதையையும் உண்ணும் வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அந்தக் காகமானது அந்த எருதினை மேலும் மேலும் கொத்தித் தின்ன தொடர்ந்து முயல்கிறது. இக்காட்சிகளோடு, வானுலகில் இருந்த பெருந்திரையில் ஒளிபரப்பு மறைகின்றது. திருவள்ளுவர் அவையினரை நோக்கிப் பேசுகிறார்.)
திருவள்ளுவர்: அன்பர்களே! பிராமணர்கள் என்று ஒரு சாரார் தம்மைத்தாமே அடையாளப்படுத்தி அழைத்துக்கொள்ளும் வரை அவர்கள் பிற பிராமணரல்லாதாரைத் தம்மைவிடப் பிறப்பின் அடிப்படையில் இழிவானவர்கள் என்று கருதுவது நீடிக்கத்தான் செய்யும். இதன் விளைவாக பிராமணரல்லாத மக்களிடையே வர்ண-மற்றும் சாதிப்பிரிவினை நீடிக்கும். நால்வர்ணப் பிரிவினையை நியாயப்படுத்துவோர்தாம் சனாதனம் என்றும் அது ஒரு தர்மம் என்றும் பரப்புரை செய்ய முயலுகின்றனர். சனாதன தர்மம் என்பது மகாபாரத்ததில் விளக்கப்பட்டவாறு ஒரு அசிங்கம்தானே தவிர, மாந்த இனத்தை உய்விக்கும் கருவி அல்லவே அல்ல. ஆனாலும், எருதின் மேலமர்ந்துள்ள காகம் போல, பிராமணரல்லாத மக்களின் முதுகின்மேல் உட்கார்ந்து கொண்டு, அவர்களையே ஏமாற்றிச் சுரண்டி வாழ விரும்பும் சில பிராமணத் தலைவர்கள் தொடர்ந்து பிராமணரல்லாத மக்களைச் சீண்டி நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி வருகின்றனர். அவர்களுடைய சீண்டல்களில் புதிதாகச் சேர்ந்ததுதான் இந்த சனாதன அதர்மம் ஆகும். ஒருவருக்குமே புரியாத ஒருவருமே விளக்காத இந்த சனாதன தர்மமானது, பிராமணரல்லாத மக்களுக்கு எதிரான பிராமண இனவெறிக்கொள்கையின் (Brahmanical policy of Aparttheid) ஒரு பகுதிதான் என்பதும், பிராமண உயர்வுக் கருத்தின் (Brahmin Supremacist Theory) ஒரு பகுதி என்பதும் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆக, சனாதன தர்மம் என்பது மனித சமுதாயத்திற்குக் கேடு விளைக்கும் கொள்கையேயாகும். இதனை முறியடிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கண்டுதான், இந்து மதத்தில் நியாய உணர்வே இல்லை என்று அம்பேத்கர் சொன்னார் (“There is in it (Hinduism) no sense of justice”-Ambedkar -Quoted in C S Braden, War, Communism and World Religions and in Page 28 of the book of A M Rajasekhariah). மற்றவை, அடுத்த அமர்வில். (திருவள்ளுவர் எழுகிறார். அவை கலைகிறது) (தொடரும்)
கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்