வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் சாணக்கியனும் அவரது சீடர் சோவும் நரகத்தில் உழன்றுகொண்டிருந்ததையும் அவர்கள் பூவுலகில் தாங்கள் செய்த கொடுஞ் செயல்களுக்காகத் தற்போது மனம்வருந்திப் பேசிக்கொண்டிருந்ததையும், அதன்பின்னர் திருவள்ளுவர் நிகழ்த்திய நிறைவுரையையும் கேட்டுச் சென்ற அவையினர், உக்ரைன்மீதான ரஷ்யாவின் போர், பாலஸ்தீன இஸ்ரேல் போர், மியான்மார், தைவான், பாகிஸ்தான், இலங்கை முதலாகப் பூவுலகின் பல நாடுகளிலும் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து மிகவும் வருத்தத்துடனேயே அவையில் அமர்ந்திருந்தனர். அப்போது, அவைத்தலைவரான திருவள்ளுவர் பேசுகிறார்).

திருவள்ளுவர்: அன்பர்களே! இதுகாறும் நமது அமர்வுகளில் இந்திய நாட்டின் அரசியற்பிழைகளை நாம் கண்டு ஆராய்ந்துவந்திருக்கிறோம். இன்று இவைகுறித்து பேசத் தகுந்தவராக, நம்மிடையே உள்ள புலவர் பாணபட்டரை அழைக்க விரும்புகிறேன். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷரின் அரசவைப்புலவராக இருந்தவர். ஹர்ஷ சரிதம் என்ற பெயரில் ஹர்ஷரின் மெய்கீர்த்தியை எழுதியவர். பல பிறவிகள் கடந்து நிற்கும் காதல் பற்றிய இலக்கியமான காதம்பரி என்ற நூலை எழுதியவர். அவர் கருத்து என்ன என்று அறிவோம். பாணபட்டரே, வாருங்கள்!.

பாணபட்டர்: ஐயனே! துறக்கம் (சொர்க்கம்) என்ற பெயரிலே இங்கு வந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால், இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணக்காண மனக்கவலை, அதாவது தாங்கள் திருக்குறளில் கூறியிருப்பது போல, நெஞ்சத்தவலம்தான் மிஞ்சுகிறது. நானும் பிராமணனாகத்தான் பூவுலகில் இருந்தேன். ஹர்ஷரின் காலம் அது. நேர்மையை, மனிதாபிமானத்தை, புத்தமதத்தை வெகுவாக நேசித்தவர் ஹர்ஷர். ஹர்ஷருடைய ஆட்சிக் காலத்திற்கு (கி.பி. 606 – 647) இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து ஃபாகியான் இந்தத் துணைக்கண்டத்திற்கு வந்து புத்த மதம் தொடர்பான நூல்களை சேகரிப்பதற்காக வந்தார். அவர் இங்கு பயணித்த காலம் கி.பி. 399 முதல் 412 வரையான 13 ஆண்டுகள் ஆகும். அப்போது இங்கே இரண்டாம் சந்திரகுப்தரின் (விக்கிரமாதித்யா) ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் காலத்தில் பிராமணீயத்திற்கு அரசு ஆதரவு பெருமளவில் கொடுக்கப்பட்டு, பிராமணர்களின் ஆதிக்கம் தலை தூக்கத் தொடங்கியிருந்தது. அதனால்தான், பிராமணர்களுக்குப் பொற்காலமாக இருந்த குப்தர் காலத்தை அனைவருக்குமான பொற்காலமாகக் கதைத்து இன்றைய பாடப்புத்தகங்கள் மூலம் பிராமணரல்லாதாரையும் படிக்கவைக்கின்றனர், இன்றைய பிராமணர்கள்.

அன்று ஃபாகியான் வந்த காலத்திலேயே, பிராமணீயத்திற்கு ஐந்தாம் நூற்றாண்டு முதல் குப்த அரசர்கள் பேராதரவு காட்டிவந்ததால், பிராமண மதம் ஒரு மூர்க்கமான கொள்கையாக வளர்ந்து நிற்பதை அவர் கண்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புத்தமதத்தினின்று விலகிச்சென்றுவிட்டனர். என்றாலும் கூட புத்தமதமே பெரும்பான்மை மக்களின் மதமாக விளங்கியது. (“When Fa Hien visited the sub-continent in the era of Guptas, Buddhism was the predominant religion in Aryavartha, in spite of the official patronage of Brahminism by the imperial family” – Page 6 – Sri Harsha of Kanauj – K. M. Panikkar – D.P. Taraporewala & Co – 1922). தான் சென்ற இடங்களிலெல்லாம், புத்தபிக்குகள் பெருமதிப்புடன் விளங்குவதையும் புத்தமதக் கல்வியையே பெருமளவில் மக்கள் கற்பதையும் ஃபாகியான் கண்டார். மேலும் ஒரு 150 ஆண்டுகள்தாம் தேவைப்பட்டன பிராமணர்கள் முழுமையாக அதிகார மையங்களைத் தமதாக்கிக்கொள்வதற்க. அரசர்களின்மீதும், இளவரசர்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவுக்கு செல்வாக்கு ஊள்ள மதகுருமார்கள் யார்? மஞ்சள்உடை அணிந்த புத்த பிக்குகளா அல்லது பழமைவாதிகளான பிராமணர்களா என்பதுதான் அந்த இடைப்பட்ட 150 ஆண்டுகளிலும் நடந்த போராட்டமாகும். (During this intervening period when the Brahmin resurrection was an ongoing one, “the question finally became merely one of priesthood, i.e., whether the yellow-robed monks of Buddhism or the orthodox Brahmins were to have the dominant influence with kings and princes” (Page 8 – ibid).

ஹர்ஷர் காலத்தில் அரசின் ஆதரவு மறுபடியும் புத்தமதத்திற்கே கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அப்போது மக்கள் புத்தமதத்திலிருந்து வெகுதூரம் பயணித்துச் சென்றுவிட்டனர். ஹர்ஷர் புத்தமதத்திற்குக் கொடுத்த ஆதரவு என்பது பிராமணர்களின் வல்லாதிக்கப் பயணத்தில் ஒரு சறுக்கலே ஆகும். இருந்தாலும் கூட, குப்தர்கள் புத்தமதத்தைப் புறக்கணித்தது போல, ஹர்ஷர் பிராமண மதத்தைப் புறக்கணிக்கவில்லை. பிராமணர்களுக்கும் ஆதரவு கொடுத்தே வந்தார். ஆயினும், பிராமணர்களுக்கு அது போதுமானதாக இல்லை. அரசின் ஆதரவு முழுமையும் தங்களுக்கே வேண்டும் என்றும் புத்தமதத்திற்கு அரசின் ஆதரவு தரவே கூடாது என்பதுமான பேராசைத் தனமான நிலைப்பாட்டில் பிராமணர்கள் இருந்தனர். அந்தக்காலகட்டத்தில், ஹர்ஷரின் பேரரசில் எங்கெங்கும் சுற்றி வந்த சீனப் பயணி யுவான் சுவாங் புத்தமதம் முழுமையாக வலுவிழந்திருந்தது என்று கூறுகிறார். (Hieun Tsang, who was an eye witness to the events, records that “in spite of the patronage of the great emperor Harsha himself, the position of Buddhism had been completely undermined” (ibid.). பிராமணர்கள் புத்தமதத்தையும் ஜைன மதத்தையும் வடக்கிலிருந்து விரட்டியடிப்பதில் வெற்றிபெற்றுவிட்டனர். ஹர்ஷர் மக்களிடையே கல்வியறிவு பரவ பெரும் முயற்சிகள் செய்தார். நாளந்தா பல்கலைக்கழகத்திற்குப் பெருமளவில் பொருளுதவி அளித்தார். புத்தமத அமைப்புக்கள் மக்களுக்கு இகவாழ்விலும் மறுமையிலும் தேவையான கல்வியைக் கொடுத்தன. ஆனால், பிராமணர்களின் கல்வி நிலையங்கள் மதசம்பந்தமான கல்வியை மட்டுமே கொடுத்தன” (“Buddhist taught five vidyas – or disciplines – grammar; the principles of mechanical arts, science of cause, and astrology; medicine; the science of reasoning; and the science of the internal along with the doctrine of karma. The Hindu learning centres concentrated on the teaching of the four Vedas, to ‘arouse the student’ to the nuances of the religion.” (‘From Indus to Independence: A trek through Indian History – Vol. 3 -Sanu Kainiraka). காலங்காலமாக இதே வேலையைச் செய்துகொண்டு மக்களுக்குக் கல்வியை மறுத்துவந்த பிராமணர்கள் மீது ஹர்ஷருக்கு எந்த மதிப்பும் வராதது வியப்பில்லை. எனவே, பிராமணர்கள் ஹர்ஷர் மீது பெரும் வெறுப்பிலிருந்தனர். அதன் விளைவாக, சாணக்கியன் சொல்லித்தந்த தந்திரங்களின் படி, ஒரு விழாவின்போது தீவிபத்தை உண்டாக்கிக் கலவரம் செய்து அவரைக் கொலைசெய்ய முயன்றனர். (“An attempt was made by some fanatical Brahmins on this occasion to assassinate the emperor whose pronounced Buddhist sympathies and public patronage of Sramanas must have been looked upon with jealousy and intolerance by them. At this time, it should be remembered, that Brahminism had become an aggressive creed again, thanks to the powerful patronage of the Guptas in the 5th century and the great revival of Sanskrit. Harsha’s close association with Buddhism must have made him unpopular with the more bigoted section of the Brahmins, but we have no mention of any further attempt made to assassinate him” (Page 27 – Sri Harsha of Kanauj: A monograph on the history of India in the first half of the 7th century – K. M. Panikkar).

யுவான் சுவாங் எழுதிய நூற்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், அவரைப் பாராட்டுவதற்காகவும் கி.பி. 643 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கன்னோஜ் நகரில் ஒரு பெரும் விழாவிற்கு ஏற்பாடு செய்தார் ஹர்ஷர். அவ்விழாவில், 4000 புத்த பிக்குகளும், 3000 ஜைனர்களும், பிராமணர்களும் பங்குகொண்டனர். பிராமணக் கடவுளர்களும் கௌரவிக்கப்பட்டனர். (Harsha “celebrated a great religious festival for which all the vassal princes, his faithful ally the Kumara Raja of Kamarupa and his son-in-law Dhruva Sena of Vallabhi, were invited. Though the position of honour belonged to the great image of the Buddha it was in no sense an exclusively Buddhist carnival, and the principal deities of the Brahmanic pantheon were also honoured. The vivid description that Yuan Chwang gives us, serves to give a clear idea as to the essentially eclectic character of Harsha’s religious feeling and his great love for pageantry. We are told that the image of the Buddha was carried in solemn procession with 20 kings, 800 elephants and an immense concourse following it” (Page 26 – Sri Harsha of Kanauj– K. M. Panikkar – op. cit.) விழா நடைபெறும் இடத்தில், மரத்தால் அமைக்கப்பட்ட 100 அடி உயரமுள்ளதொரு கோபுரத்தின் உச்சியில் புத்தரின் சிலை வைக்கப்பட்டுத் தினமும் வழிபாடு செய்யப்பட்டது. அந்த விழா பல நாட்கள் நடந்தது. ஆனால் ஒருநாள் திடீரென்று அந்த மரக் கோபுரம் ஒரு பிராமணக் கூட்டத்தினால் தீக்கிரையாக்கப்பட்டது. The Assembly lasted many days, but ended when the wooden structure built for housing the Buddha image “was burnt down by a group of Brahmins” (Page 64 Revenge and Reconciliation –Rajmohan Gandhi). விபத்து நடந்த இடத்திற்குத் தானே நேரில் சென்று ஆய்வு செய்தார் ஹர்ஷர். அப்போது வெறியன் ஒருவனால் குறுவாள்கொண்டு தாக்கப்பட்டார். அவனைப் பிடித்து விசாரணை செய்யும்போதுதான் ஹர்ஷரைக் கொலைசெய்ய பிராமணர்கள் தீட்டியிருந்த திட்டம் தெரியவந்தது. “Harsha was personally inspecting the damage when he was attacked by a fanatic with a dagger. The person was caught and thereafter a Brahmin plot to assassinate the king was uncovered….”– (‘From Indus to Independence: A trek through Indian History – Vol. 3 – Sanu Kainiraka). “The leaders of the plot, all Brahmins were executed and another 500 exiled from the kingdom” (ibid.).

சாணக்கியன் காலம் முதல், புஷ்யமித்ர சுங்கன் காலம், ஶ்ரீமத் பாகவதக் காலம், மகாத்மா காந்தியடிகள் காலம், பன்சாரே காலம் வழியாகக் கௌரி லங்கேஷ் காலம் வரை பிராமணீயக் கொள்கை காரணமாக, பிராமணீயத்தை இறுக்கி நிலைப்படுத்துவதற்காக, நடைபெற்ற கொலைகள் எண்ணிலடங்காதவை; எண்ணவியலாதவை. இவை அனைத்துக்கும் மூல காரணம், பிராமணர்களின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில், அனைத்து அதிகார மையங்களையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ள முயல்வதுதான். இன்று வரை அவர்கள் மனம் திருந்தவில்லை; பக்குவப் படவில்லை. இவர்களுடைய கூட்டுச் செயல்பாட்டின் தன்மை தனிப்பட்ட பிராமணர்களுக்குக்கூட சமூகத்தில் நியாயம் கிடைக்காமல் தடுத்து வருவதைப் பற்றிக்கூட இவர்கள் கவலைப்படவில்லை.

(காந்தியடிகள் குறுக்கிடுகிறார்)
காந்தியடிகள்: பிராமணர்களின் கூட்டுச்செயல்பாட்டின் தன்மை தனிப்பட்ட பிராமணர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தடுத்து வருகிறது என்றால் என்ன? எப்படி?

பாணபட்டர்: ஆம்! பிராமணர்களின் பொது நலனுக்காக, தனிப்பட்ட பிராமணர்களுக்கு நடக்கும் அநியாயத்தைப் பற்றி பிற பிராமணர்கள் கவலைப்பட மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் பிராமணர்களின் பொதுக் கருத்தாக இருந்ததேயன்றி, கொலைசெய்யப்பட்ட சங்கரராமனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பது அவர்களின் பொதுக்கருத்தாக இருக்கவில்லை. இதன் விளையாக ஒரு கொடுங்குற்றம் புதைக்கப்பட்டு மறக்கப்பட்டது. ஐ.ஏ. எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது அமிலம் ஊற்றித் தாக்கப்பட்டதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று சந்திரலேகாவே தெரிவித்தும் கூட, குற்றத்திற்குக் காரணமான ஜெயலலிதா பக்கம்தான் பிராமணர்களின் பொதுக் கருத்து இருந்ததே தவிர, நியாயத்தின் பக்கம் இருந்த சந்திரலேகாவுக்குச் சார்பாக அவர்களின் பொதுக்கருத்து இருக்கவில்லை.

மனித சமுதாயத்தின் அடிப்படை உயிர்நாடியாக இருப்பது, எப்போதுமே நியாயத்தின் பக்கம் நிற்கக்கூடிய Universal Conscience (உலகின் மனச்சாட்சி) மட்டுமே. ஆனால், இந்தியாவில இரண்டு பிராமணர்களுக்கிடையே தகராறு என்று வரும்பபோது அங்குள்ள பிராமணர்களின் Universal Conscience என்பது, நடந்த குற்றச் செயலையோ, அது தொடர்பான உண்மைகளை விளக்கும் சாட்சியங்களையோ பற்றிக் கவலைப்படாமல், குற்றம் செய்தவர் யாராயினும் அவர் தண்டிக்கப்படவேண்டியவரே என்ற நேர்மையான நடுநிலை நோக்கு இல்லாதவர்களாக இருப்பதால், சம்பந்தப்பட்ட இருவரில் யாருக்கு ஆதரவு தந்தால் தங்கள் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்திற்கு ஆதாயம் என்ற கணித்து அவர்கள் பக்கம் நிற்கின்றனர். இச்செயலே, இவர்கள் விரும்பும் உலகமானது, நீதி நியாயத்தின்பாற்பட்ட உலகம் அல்ல என்பதையும், இவர்கள் சிந்தனை மாந்த நேயம் உள்ள சிந்தனையாக இன்றுவரை பக்குவம் பெறவில்லை என்பதையும் நிரூபிக்கும். தனிப்பட்ட ஒரு பிராமணனுக்கு நிகழும் அநியாயத்தைப் பற்றிக் கவலைப்படாத இவர்களா, பிராமணரல்லாத அனைத்து மக்களுக்கும் இவர்களது சதுர்வர்ணக் கொள்கை காரணமாக, இவர்களது Brahmin Supremacist Theory காரணமாக இன்றுவரை இழைக்கப்படும் குற்றங்களைப் பற்றி, அநீதிகளைப் பற்றிக் கவலைப்படப்போகிறார்கள்? இவர்களா இந்தியாவில் சமநீதிச் சமுதாயம் அமைக்க முன்வரப் போகிறார்கள்? தன்னால் எருதுக்கு உண்டாகும் புண் பற்றிக் காகம் ஏன் கவலைப்படப்போகிறது? எனவே, பிராமணரல்லாத மக்கள் விழித்தெழுந்து இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலர நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்கால இந்தியா நாகரிகம் இல்லாததொரு நாடாக, அன்று மகாவீரரும் புத்தரும் பிறப்பதற்கு முன் எவ்வாறு சதுர்வர்ண அவலம் நிறைந்த நாடாக ஆரிய வர்த்தம் இருந்ததோ அதேபோல மறுபடியும், பிராமணர்களின் வல்லாதிக்கத்தில் உழன்று வாடும்.

காந்தியடிகள்: உண்மை.

பாணபட்டர்: ஆனால், இதையெல்லாம் பற்றி இன்றைய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சற்றும் கவலைப்படவில்லை. பிராமண வல்லாதிக்கத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள், பி.எம். கேர்ஸ், வாக்கு எந்திரங்கள், தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள், மூடு மந்திரமாகச் செயல் படும் தேர்தல் ஆணையம், அரசு அலுவலகங்கள், உளவு நிறுவனங்கள் ஆகியவை மட்டுமின்றி, நீதித்துறையையும் தங்கள் கட்சி அலுவலகங்களாக மாற்ற முனையும் செயல்கள் என பல்வேறு கோணங்களில் இந்தியச் சமுதாயத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே சதிச்செயல்கள்தாம். எந்த அளவுக்கு அநாகரிகமாகச் செயல்படலாம் என்பதற்குக்கூட ஒரு வரையறை ஏதும் இன்றி சாணக்கியன் வழியில் செயல்பட்டு மனித சமுதாயத்தையே மிகவும் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள். சாணக்கியன் ஒரு மனிதனே அல்லன். மனித குலத்திற்கு மிகப்பெரிய எதிரி. அவரை ஒரு வீரராகக் காட்ட இவர்கள் முயலுகிறார்கள். இது மிகவும் நாணயமற்றதொரு செயல். அன்றே நான் எனது காதம்பரி நூலில் கௌடில்யரின் கொடிய உருவம் பற்றி எச்சரித்திருந்தேன். நான் சொல்லியிருந்ததாவது:

“கௌடில்யரின் நெறிமுறைகள் இரக்கமில்லாதவை; கொடுமைகள் நிறைந்தவை; பிறரிடம் எந்தப் பரிவும் காட்டாதவர்களும், பிறர் உணர்வுகளை என்றுமே கருத்தில் கொள்ளாதவர்களும், இரக்கமே இல்லாதவர்களும், பில்லி சூனியம் வைக்கும் வழக்கமுள்ளவர்களும், எப்போதுமே கல்நெஞ்சுக்காரர்களுமான பூசகர்களைத் தனது ஆசான்களாகக் கொண்டவர் அந்தக் கௌடில்யர்; மற்றவர்களை ஏய்த்துப் பிழைக்கும் நோக்கிலேயே செயல்படுபவரக்ளைத் தமது ஆலோசகர்களாக வைத்திருந்தவர்; ஆயிரக்கணக்கான மன்னர்களின் செல்வத்தை எப்படிப் பறித்துக்கொள்வது என்ற ஆவலில் உந்தப்பட்டவர் அவர்; அழிவுண்டாக்கும் வகையைச் சார்ந்த அறிவியலைச் (Destructive Science) செயல் படுத்தும் செயலில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்; அப்படிப்பட்ட கௌடில்யர் தன்னுடைய அன்புச் சகோதரர்களையே, தன்மீது இயற்கையாகவே அன்பு வைத்து நல்லுறவோடு உள்ள பாசம் மிக்க சகோதரர்களையே, தனக்குத் தேவையானால் பலிகடாவாக்கிக் கொலை செய்துவிடுபவர். எனவே, கௌடில்யரின் அர்த்த சாஸ்திர்ம் என்ற நூலை வழிகாட்டியாகக் கொண்டு தமது அடாத செய்ல்களுக்கு அதிகாரம் தரும் நூலாகக் காட்டுபவர்கள், உலகில் எதிலுமே நேர்மையோடோ நியாயத்தோடோ இருக்கமாட்டார்கள்.” (“Is there anything that is righteous for those for whom the science of Kautilya, merciless in its precepts, rich in cruelty, is an authority; whose teachers are priests habitually hard hearted with practice of witchcraft; to whom ministers always inclined to deceive others are councillors; whose desire is always for the goddess of wealth that has been cast away by thousands of kings: who are devoted to the application of destructive sciences; and to whom brothers affectionate with natural cordial love, are fit victims to be murdered?” – Pages x and xi – Introductory Note by Dr. J. F. Fleet – Kautilya’s Arthasastra – Dr. R. Shamasastry – Mysore Printing and Publishing House – Eighth edition 1967).
இருந்தும்கூட, இன்றைய இந்தியாவில் கௌடில்யரைப் போற்றும் விதமாகச் சாணக்யபுரி என்றெல்லாம் அரசாங்கமே பெயரிட்டு வைத்திருப்பது, இந்திய அரசின் ஆணிவேரில் சாணக்கியச் சதுர்வர்ணத் தந்திரங்கள்தாம் இருந்துகொண்டிருக்கின்றன என்பதை நன்கு தெளிவாக்குகிறது. எனவே, இந்திய அரசு ‘வாய்மையே வெல்லும்’ என்று வெளியில் சொல்லிக்கொண்டு ‘சதிதான் வெல்லும்’ என்ற கொள்கையோடுதான் உண்மையில் செயல்படுகிறது என்பது நன்கு தெரிகிறது.
(அப்போது திருவள்ளுவரோடு மேடையில் அமர்ந்துள்ள டால்ஸ்டாய் பேசுகிறார்)
டால்ஸ்டாய்: உண்மைதான். திருவள்ளுவர் சென்ற அமர்வில் தனது நிறைவுரையில் சொன்னது போல, பூவுலக வாழ்வே இறைவனால வைக்கப்பட்ட ஒரு தேர்வு என்பது அறியாமல் படித்தவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணர்கள் பலர் கோயில்கள், அரசுப் பதவிகள் முதலான அதிகாரமையங்களில் அமர்ந்து கொண்டு நேர்மைக்கு மாறாகச் செயல்ப்பட்டு, இறைவன் வைத்த அந்த வாழ்க்கைத்தேர்வில் தோல்வியடைந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பாணபட்டர்: ஆம்! அதிகார போதை அவர்கள் கண்ணை மறைப்பதால் வாழ்க்கை முழுதுமே அவர்கள் தங்கள் தவறுகளை உணர்வதில்லை. மாறாக, கடைசி வரை அகங்காரத்துடன் பேசுவதும் செயல்படுவதுமாக இருக்கிறார்கள். கிடைத்த வாழ்க்கையை வீணாக்கிவிட்டு வந்தபிறகுதான், கடந்த அமர்வில் நாம் கண்டது போல, சாணக்கியர், சோ, போன்றோர் வருந்துகின்றனர். பூவுலகைக் கெடுத்துவிட்டு நரகத்துக்கு வந்தபின் வந்தபின வருந்தி என்ன பயன்?
கலில் ஜிப்ரான்: இவ்வளவு காலம் பிராமணர்கள் தொடர்ந்து இவ்வாறான இனக்குற்றங்களில் (Racial crimes) ஈடுபட்டு வருவது எப்படி முடிகிறது?

பாணபட்டர்: காலங்காலமாகச் செய்துவந்த சில வழிமுறைகளை பிராமணர்கள் விடாமல் தொடர்ந்து செயலபடுத்துகிறார்கள். இன்றைய சூழலில் அவர்களின் செயல்பாட்டு நுட்பங்களாவன: (1) உளவுத்துறையை எப்போதும், சாணக்கியன் சொல்லிய வழியில், பிராமணர் வசமே வைத்திருத்தல், (2) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளைப் பிடித்து அமைச்சர்களாவதைவிட, அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரவர்க்கப் பதவிகளைப பிடித்துக் கொள்ளுதல், (3) தனது செயல்பாடுகளுக்கு எந்தப் பொறுப்பும் நீதிபதிகள் ஏற்காத வகையில் (without accountability) நீதித்துறையை வைத்திருத்தல், (4) மேல்நிலை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவியிடங்களில் பெருமளவு பிராமணர்களையே நியமித்தல், (5) ஊடகங்களை பிராமணமயமாக்குவது, பிராமணர் கொள்கைக்கு மாறான முறையில் இயங்காமல் கட்டுப்படுத்துவது, (6) பிராமணரல்லாதார் நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஊடகர்கள் (Journalist) எந்த ஊடக அமைப்பிலாவது இருந்தால், ஊடக உரிமையாளருக்கு, அரசின் பல்வேறு துறைகளையும் திட்டமிட்ட முறையில் தவறாகப் பயன்படுத்தி மிரட்டி, அந்த ஊடகர்களை வெளியேற்றுவது, (7) பிராமண வல்லாதிக்கச் செயல்கள் மக்களின் பார்வையிலிருந்து தப்புவதற்காக, பிற மதத்தினருக்கு எதிராகவும், இந்து மதத்திற்குள்ளேயே பல சாதியினருக்குள் ஒருவருக்கொருவர் உள்ள பிணக்குகளைப் பெரிதாக்கியும், மக்களின் கவனத்தைத் திருப்பிப் பரப்புரை செய்ய ஊடகங்களைப் பயன்படுத்துதல், (8) நாட்டில் அடித்தட்டு மற்றும் இடைநிலை மக்களின் தனிப்பட்ட பொருளாதார வளம் பெருகாமல் பார்த்துக்கொள்வது, (9) சாணக்கியன் சொல்லிக்கொடுத்தவாறும், திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடைமுறைப்படுத்தியவாறும் விதவிதமான வரிகள் போட்டு மக்களை வாட்டுவது, (10) அரசின் வரிப்பணத்தை கட்சிப்பணமாக மாற்றிவிடுவதற்கு ஏதுவாக, பெரும்பணக்காரர்களுக்குக் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் பங்கு வாங்கிக் கொள்வது, (11) சாணக்கியன் சொல்லித்தந்த முறையில், கொடுங் குற்றவாளிகளைக் கட்சியில் சேர்த்து, அவர்களின் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து காப்பாற்றி, ஊதியம் கொடுத்து ஒவ்வொரு சிற்றூர்ப் பகுதியிலும் அடிமட்ட வேலைகளை அவர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்வது, (11) அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை ஒன்றுமில்லாமல் ஆக்க முயல்வது (12) அது முடியாவிடில் அரசுப் பணிகளையே தனியார்ப் பணிகளாக மாற்றுவது, (13) எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருந்தால், தமது உளவாளிகளை அதில் அமைச்சர்களாக்கி தங்களுக்கு வேண்டிய காரியங்களை, எதிரிகளின் ஆட்சியிலேயே செய்துகொள்ளவேண்டியது, (14) சமஸ்கிருதத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை அதற்காகக் கணிசமான அளவில் ஒதுக்கிக் கொண்டு அதனை பிராமணப் பண்டிதர்களுக்கு அள்ளிக் கொடுத்து விடுவது, (15) அனைத்துச் சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர் ஆக்காமல் தடுத்து கோயில்களைப் பிராமணர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, (16) கோயில் பணத்தை (காந்தியடிகள் திருவனந்தபுரம் சென்றபோது கண்டது போல) பிராமணர் நலத்திற்கும் வளத்திற்கும் பயன்படுத்துவது, (17) நிர்வாகிகளுக்கு ஊதியம் தருகிறோம் என்ற பெயரில் கோயில் வருமானத்தை (திருப்பதி கோயில் ஜீயர்களுக்குத் தருவதைப்போல) பிராமணர் நலனுக்குப் பெருமளவில் ஒதுக்கிக்கொள்வது, (18) ரிக் வேத காலம் முதல் ஆரியர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட சிவவழிபாட்டை முழுமையாகச் சீர்குலைப்பதற்காக, சிவன் கோயில்களின் முகாமைத்துவத்தைக் குறைத்து அக்கோயில்களை உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாத ஸ்மார்த்தர்களின் கோயில்களாக மாற்றிவிடுவது, முதலானவை அவர்களின் செயல்நுட்பங்களில் (Techniques) சில ஆகும்.

(அப்போது மறைமலையடிகள் பேசவிழைகிறார்)
மறைமலையடிகள்: ஆம்! பாணபட்டர் சரியாகவே கணித்திருக்கிறார். அவர் சொல்லியது பிராமணர்களின் செயல்நுட்பங்களில் சில மட்டுமே. இருந்தாலும், முகாமையான பலவற்றை அவர் இங்கே சொல்லியிருக்கிறார். இறுதியாக அவர் சொன்ன செயல்நுட்பம்தாம் அனைத்திலும் முகாமையானது. இன்றைய பிராமணர்கள், 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவர்கள் செய்யும் அநியாயச் செயல்களைக் கேட்பார் யாருமில்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். பிராமணர்களுக்குச சிவ வழிபாட்டைக் கண்டாலே ஆகாது. அவ்வளவு வெறுப்பு ரிக் வேத காலம் முதலாக அவர்களுக்குச் சிவன் மீது உண்டு.

காந்தியடிகள்: ஆனால், பிராமணர்களில் ஐயர்கள் சிவ வழிபாடு செய்பவர்கள்தாமே?

மறைமலையடிகள்: ஆம்! ஆனால், இந்த மாற்றம் ஒரு அரசியல்தேவைக்காக அவர்கள் செய்துகொண்ட சமரச முயற்சிதான். புத்தர் காலத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில், ஸ்வேதாஸ்வதார உபநிஷத் காலத்தில்தான இந்தச் சமரச முயற்சியை அவர்கள் முன்னெடுத்தார்கள். இருந்தும் கூட, அனைத்து பிராமணர்களும் இந்த முயற்சியை ஆதரிக்கவில்லை. உருவ வழிபாடு செய்யாத வேதகால பிராமணர்கள், மற்ற பிராமணரல்லாத மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக ஹரி என்ற புதிய கடவுளை உருவாக்கி வைணவத்தைப் பரப்பத் தீர்மானித்தனர். (“பிராமணர் கடவுளான விஷ்ணு – தமிழ்ப்படுத்தப்பட்ட திருமால் வழிபாடு” – பக்கம் 43 – தமிழர் சமூக வாழ்வு – கி.பி. 250 முதல் 700 வரை – இர. ஆலாலசுந்தரம் – பாவை பப்ளிகேஷன்ஸ் – சென்னை). அந்த வைணவ மதத்திற்கும், பிராமணரல்லாத மக்களிடையே பிரமாதமான வரவேற்பு ஏதும் இல்லாததால், பிராமணர்களில் ஒரு பகுதியினர் சிவ வழிபாட்டை முழுமூச்சோடு ஏற்றுக்கொண்டு சிவன் கோயிலில் நுழைந்து பூசகர்களாகவும் ஆயினர். அவர்கள்தாம் ஐயர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவ்வாறான சமரசம் ஏதும் செய்துகொள்ளாமல் சிவ வழிபாட்டை இன்று வரை வெறுத்து வருபவர்கள் ஐயங்கார்கள் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றனர்.
ஸ்மார்த்தர்களான இந்த ஐயர்கள் இன்று வரை வேதத்தைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார்களேயன்றி தமிழை அல்ல. வேதமுறை வழிபாடு என்பது உருவ வழிபாடு அல்ல. எனவே இந்த ஸ்மார்த்தர்களுடைய எண்ணமும் செயலும் வேதம் சார்ந்ததாகத்தான் இருக்கிறதே தவிர, தமிழர்களின் கடவுளான சிவனை மனம் ஒன்றி ஆத்மார்த்தமாக வழிபடும் முறை பற்றியதாக இதுகாறும் அமையவில்லை. எனவே சிவன் கோயில்களிலும் இவர்களுடைய செயல்கள் ஐயத்திற்கிடமான வகையில்தான் இதுவரை அமைந்துள்ளன.
இப்போது, இந்த ஸ்மார்த்தர்கள் புதிதாக ஒரு செயல்நுட்பத்தைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். அதன்படி, கும்பகோணம் அருள்மிகு நாகேஸ்வரசாமி கோயிலில், காஞ்சிபுரம் சங்கரமடத்துத் தலைவர்களான சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் உருவப்படங்களைக் கோயிலின் உட்பிரகாரச் சுவர்களில் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் படம் வரைந்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அரசியற் சட்டத்தின் 51 (A) (f) சொல்கின்ற அடிப்படைக் கடமையும், Prevention of Damage to Public Property Act, 1984 எனும் சட்டமும், The Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958 எனும் சட்டமும் இவ்வாறு நாகேஸ்வரன் கோயிலின் உட்சுவரில் படத்தை வரைந்திருப்பது சட்டப்படி தவறு என்று நிறுவுகின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜராஜன் சிலையை வைப்பதற்கு ஒன்றிய அரசின் தொல்லியல் துறை பேரெதிர்ப்பு தெரிவித்தது. ( The Union Government, then, said that “nothing should be done to disturb the original character of the temple” – The Hindu – 09.02.2020). அப்படியிருக்க, சிவன் கோயிலான குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் வரையப்பட்டுள்ள் மூன்று ஸ்மார்த்த பிராமண சமூகத் தலைவர்களின் படங்கள் அந்தக் கோயிலின் “original character” ஐ “disturb” செய்யவில்லையா என்ன? இருந்தும் கூட அறநிலையத்துறை அலுவலர்கள் வாளாவிருப்பதன் மர்மம் என்ன? இது குறித்து எழுத்துமூலமாக விளக்கங்கள் கேட்டும்கூட கள்ள மௌனம் காப்பது யாரைக் காப்பாற்றுவதற்காக?
மேலும், காஞ்சி மடத் தலைவர்கள் என்பதால் அவர்களின் படங்களை வரையலாம் என்றால், சைவ மடங்களான திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை ஆகிய மடங்களின் தலைவர்களின் படங்களையும் அங்கே வரைய அனுமதிப்பார்களா? மாட்டார்கள் என்றால், ஏன்? இவர்கள் பிறப்பின் அடிப்படையில் தாழ்ந்தவர்கள் என்ற காஞ்சி மடத்தின் அகங்காரக் கருத்துதான் காரணமா? சந்திரசேகரேந்திர சரசுவதியின் பேச்சுக்களை “தெய்வத்தின் குரல்” என்று காட்ட முயன்றவர்கள் இன்று அவரையும் அவரது சீடரையும் தெய்வமாகவே மாற்றிக்காட்ட செய்யும் சதித்திட்டமா இது? மனிதாபிமான உணர்வே இல்லாத இந்த மூன்று பேரையும் தெய்வமாகக் காட்ட முயல்பவர்களிடம் மனித நேயமா மிளிரும்? இப்படிப்பட்ட அநியாயச் செயல்களுக்கு இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் துணைபோவதென்பது கயமைத்தனமான செயல் அல்லவா?
அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியார் கி.பி. எட்டாம் நூற்றாண்டில்தான், பிராமணர்கள் தமிழ்நாட்டுக கோயில்களில் புகுந்து பூசகர் வேலையை பிராமணரல்லாதாரிடமிருந்து கைப்பற்றிக்கொண்டார்கள் என்ற உண்மையை நீதியரசர் ஏ.கே. இராசன் குழுவின் முன்பு ஒத்துக்கொண்டுள்ளார். (Agnihothiram Thathachariyar has confessed that idol worship is alien to Brahmins, the Smarthas. Para IV (iv) in Pages 7 & 64 of the Tamil Nadu Government Gazette Extraordinary dated 01.12.2008 carrying the report of the High Level Committee chaired by Mr. Justice A. K. Rajan, runs thus quoting him:
“Vedas are supreme in Smartha religion. Its foremost principle is to realise Brahmam. …. Smarthas are Brahmins….. It believes that any offering to Gods can be made only through Yagnas (through sacred fire) and it does not believe in idol worship. Therefore, Smarthas have no temples as their own. According to Agni Hothiram Thathachariyar, before 8th Century, only the Non-Brahmins performed the pooja rituals in the temples. After 8th Century, Brahmins captured the performance of poojas and rituals in the temples. Poojas and Archanas are later developments. It may be performed by all. The word pooja is not a Sanskrit word. It has been taken from Tamil word “Poo Sei” (பூ செய்). They have changed it as Pooja, a Sanskrit word, using the letter “Ja”. Performing (worshipping) with flowers is Poosai. Generally, “Nature” is the God for Brahmins. No idol worship at all. They do only Sandhya vanthanam, (a form of worship during sun-rise and sun-set). Later, they appropriated the temple worship as their own.”

இந்தக் கோயிலில் வரையப்பட்டுள்ள படத்தில் உள்ள சந்திரசேகரேந்திர சரசுவதி, பிராமணீய இனவெறிக்கொள்கை தலைக்கேறியவர். காந்தியின் வைக்கம் போராட்டத்தை எதிர்த்தவர். பிராமணர்களைவிட மற்றவர்களெல்லாம தாழ்ந்த பிறவியினர் என்று பரப்புரை செய்தவர். அவருடைய படம் எப்படி புனிதமான இடமான கோயிலில் இடம்பெறமுடியும்? அவர் சொல்கிறார்:
“இந்த லோகம் ஏன் பாவத்தை அதிகமாக அடைந்துவிட்டது என்றால் குலதர்மத்திலிருந்து நாம் நகர்ந்துவிட்டதுதான் காரணம். தொழில் பாகுபாடும் ஆச்சாரங்களை அவாளவால் பின்பற்றுவதும் மாறி, இப்போதுள்ள நிலைமை ஏற்பட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்துகொள்ளவேண்டும். ‘இப்போது எல்லாம் அடியோடு குன்றிப் போய்விட்ட ஸ்திதியில் பழையபடி பண்ணுவது ஸாத்யமா?’ என்றால், எனக்குத் தெரியாது. ஸாத்தியமில்லை என்று விட்டுவிடாமல், இப்போதாவது எங்கே எவ்வளவு முடிகிறது என்று பார்த்து அங்கே அந்த அளவுக்குப் பழைய வழிக்குத் திருப்பத்தான் பாடுபடணும். காந்திக்கு இதிலே நம்பிக்கை குறைந்து போயிருக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில், நான் அதற்குத் தயாராக இல்லை. மறுபடியும் இந்தச் சாதி ஏற்பாட்டை உண்டாக்கத்தான் வேணும்”………”வேதம் படிக்க இவன்தான் லாயக்கு என்று பிராமணனை ஒதுக்கி உயர்த்தி வைத்திருப்பதை எப்படி தவறு என்று கூறமுடியும்? எல்லோரும் வேதம் படித்தால் எப்படி? எல்லோரும் சமமா?” – தெய்வத்தின் குரல் – பகுதி 3 – பக்கம் 876)

இந்த காஞ்சிமடத்தலைவர்களின் படங்கள் அருள்மிகு நாகேசுவர்சாமிக் கோயிலில் வரையப்பட்டதால் அக்கோயிலின் புனிதம்தான் கெட்டுப்போயிருக்கிறது. இந்தச் சதிச் செயலில், பெரும்பங்கு அந்தக் கோயிலின் நிர்வாக அலுவலருக்கு இருக்கிறது. இவர் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர் இந்தப் படங்களை அங்கு வரைய அனுமதி கேட்டவர் யார், கொடுத்தவர் யார் என்ற அடிப்படைக் கேள்விக்குக் கூட விடையிறுக்க மறுக்கிறார். இந்தக் கேள்விக்கான விடையை மனுதாரருக்குக் கொடுங்கள் என்று மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் ஆணையிட்டும்கூட அந்த நிர்வாக அலுவலர் மௌனம் காக்கிறார். அவ்வாறு மௌனமாக இருத்தலே அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய மற்றுமொரு (Misconduct) குற்றச் செயலாகும். இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறையின் ஆணையருக்கு 12.09.2022 ல் விரிவான கடிதம் எழுதப்பெற்றது, ஆனால், அவரும் மௌனம் காக்கிறார். இந்த அதிகாரிகளுடைய ஒரேமாதிரியான சட்டவிரோதச் செயல்பாடுகளைக் காணும் போது அந்தப் படங்களை அந்தக் கோயிலில் வரைந்தவர்களும் அதிகாரிகளும் ஒரு மஃபியாக் கும்பலைப் போலச் செயல்பட்டிருக்கின்றனர் என்பதும் தற்போதும்கூட அறநிலையத்துறை அலுவலர்கள் மீது அந்தக் கும்பலின் வன்பிடி இருக்கிறது என்பதும், இந்தக்கோயிலில் வரையப்பட்ட படங்கள் ஒரு பெரும் சதித்திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிகிறது.

இதுவரை இந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதிகாரிகள் ஆணவ மௌனத்தையும் காணும்போதும், நாடெங்கும் அரச மரத்தடியில் இருந்த புத்தர் சிலைகளை நீக்கி வடநாட்டு வினாயகர் சிலைகளை வைத்த வரலாற்று நிகழ்வுகளையும், புத்தமத விகாரைகளைக் கோயில்களாக மாற்றிய வரலாற்று உண்மைகளையும் கணக்கில் கொண்டோமானால், தற்போது அருள்மிகு நாகேசுவரசாமி கோயிலில் இந்த சங்கராச்சாரியார்களின் படங்களை வரைந்தவர்களின் நோக்கம் சற்றும் நேர்மையில்லாதது என்பதும், சிவபெருமானையும் சிவன் கோயிலையும மிகவும் அவமதிக்கும் நோக்கில் உள்ளது என்பதும் நன்கு விளங்கும். மேலும், இவர்களுடைய எதிர்காலத்திட்டம் மேலும் கொடிய நோக்கில் இருக்கும் என்பதும் விளங்கும். காலப்போக்கில் இந்தப் படங்களின் கீழே இந்த மூன்று பிராமணத் தலைவர்களின் சிலைகளை வைப்பதும், பின் அந்த சிலைகளுக்குப் பூசை செய்வதும், பின் அந்தப் பூசையைப் பெருவிழாவாக நடத்துவதும், அதன் பின், மூலவரான சிவபெருமானுக்கு நடத்தப்பெறும் திருவிழாவை விட இந்த பிராமணத்தலைவர்களுக்கு நடத்தப்படும் விழாவை அதிக விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டாடி, சிவன் கோயில்கள் அனைத்தையும் காஞ்சி சங்கராச்சாரிகளின் கோயில்களாக கடத்திச் செல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது. கடந்த கால வரலாறு பல எச்சரிக்கை அறிகுறிகளைத் தருகிறது. ஏன் அன்று அப்படி நடந்தது என்பது பற்றிச் சிந்தித்து, செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனி அவ்வாறு நிகழ்வுகள் நடந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிந்தனையாளர் நார்ட் ஆங்க்லியா கூறுகிறார். “The past is filled with warning signs. We must be able to reflect on the events that built up to them, learn from mistakes made and resist and question if we see similar patterns emerging” – Nord Anglia).

தமிழ் நாட்டில் உள்ள உண்மையான சிவனடியார்கள் விழிப்புற்றெழுந்து கும்பகோணம் அருள்மிகு நாகேசுவரசாமிக் கோயிலில் நடந்துள்ள இந்த சிவநிந்தனைச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கொடியோரிடமிருந்து சிவன் கோயில்களைக் காத்து நிற்கவேண்டும். இது சிவனடியார்களின் பணி!
(மறைமலையடிகள் பேசி முடித்ததும் அவையில் பேரமைதி சூழ்ந்தது. சற்று நேரம் கழித்துத் திருவள்ளுவர் மட்டும் புன்னகை பூத்தார்).

திருவள்ளுவர்: தமிழ்மக்கள் இனியாவது நல்லறிவு பெற்று உப்புப்போட்டுச் சாப்பிடுகிறார்களா, இல்லை, உணர்வற்ற அவியுணர்வின் மாக்களா என்று தெரிந்துகொள்ள அவர்களுக்கே கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு இது.
(திருவள்ளுவர் எழுகிறார். அவை கலைகிறது)
(தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *